அலை 🌊 44

671 23 12
                                    

யாருக்கும்  கட்டுக்கடங்காத காற்றைப் போல, காலமும், நேரமும் யார் கட்டுக்கும் நில்லாமல் சென்றதில், நாட்காட்டியில் முழுதாய் இரண்டு வாரங்கள் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போயிருந்தது.

கருநீல நிற வானம், மெல்ல மெல்ல தன் வெளீர் நீல நிற சேலையை அழகாக வரித்துக் கொள்ளும் அதிகாலை வேளை,

தன் மார்பின் மேல் ஏதோ சுகமாக அழுத்தவும் அதன் மென்மையில் கண்களை சிரமப்பட்டு திறந்தான் கார்த்திக். 

தன் மார்பில், முகம் புதைத்து பூனைக் குட்டியாய், அதில் தன்பட்டு கன்னங்களை  உரசி, சுகமாய் துயில் கொண்ட மனையாளின் செயலில் அவன் இதழ்கள் மெல்ல முறுவலித்து கொண்டன...

தூக்க கலக்கத்தில் இன்னும் முழதாக குணமாகாமல் காயம் பட்ட கையை உரிமையாய் தன் இடையிலிட்டு, உறங்கும் மனையாளின் அழகில் சொக்கி தான் போனான் ஆடவன்.

தன் காதல் மொத்தம் கானல் நீர் ஆகிவிடுமோ  என கலங்கியவனுக்கு, கையில் கிடைத்த  சொர்கமல்லவா இவள்.

பார்க்க பார்க்க தெவிட்டாத முகம், தனக்காக உயிரையும் கொடுக்க துணிந்தவள் ஆயிற்றே, அவள் காயம்பட்ட கரங்களை தன் கரங்களோடு சோர்த்து கொண்டவன்,  அதை தன் கன்னத்தில் பதிந்துக் கொண்டதும், வலியில் முகம் சுருங்கிட, இன்னுமே அவனை ஒண்டிக் கொண்டாள் ரேவதி.

அவள்  தளிர் கரத்தினை மென்மையாக தன் ஈர இதழ்களில்  ஒற்றி எடுக்க, அவள் நெற்றி சுருக்கம் நீங்கி அவளது சிவந்த இதழ்கள் அழகாக  புன்னகைத்துக் கொண்டன.

தன்னை‌ ஓட்டி உரசி உரிமையாய் படுத்திருக்கும் மனைவியின் செய்கைகளில், காதலனின் பார்வை தற்போது  கணவனின் பார்வையாக  அவள் மீது படிந்தது அவனின் உணர்வுகளை தட்டி எழுப்பியது.

ஏசியின் குளுமை  வேறு,  மெல்லிடையாளின் மென்இடையில் கையிட்டு  மேலும் அணைப்பை இறுக்க சொல்லி கட்டளையிட, 
தாயின் சொல் பேச்சை கேட்கும் மழலையாய், மனதின் சொல்பேச்சை தட்டாமல் கேட்டவன், 

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Donde viven las historias. Descúbrelo ahora