அலை 🌊12🌊
கருமை நிறத்தை பூசியது போல மையிருட்டை உடையாக தரித்திருந்தாள் வானமகள். அதில் கைநிறைய அள்ளி தெளித்த வைரங்களை போல் ஒளி வீசிய நட்சத்திர சிதறல்கள் அவள் உடையெங்கும் பளப்பளத்திருந்தது.. அன்று வெள்ளிக் கோடாய் பிரகாசித்த பிறைநிலவு இன்று பூரண நிலவாய் ஜொளித்து வான மகளின் நெற்றியை அலங்கரிக்கும் அழகிய இரவு நேரம்.
அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாத இடம் என்பதால் அந்த இடமே நிசப்தமாக இருந்தது. சர் சர் என காற்றை கிழித்துக்கொண்டு வாகனங்கள் ஒன்றிரண்டு அவளை கடந்து சென்றதில், இருக்கும் இடம் அவள் இதயத்தில் சற்று பயத்தை உற்பத்தி செய்திருந்திருக்க,
'சரி இனி பஸ்ஸிற்கு நின்று இருப்பதை காட்டிலும் வரும் ஏதாவது ஒரு ஆட்டோவில் ஏறி சென்று விடலாம் என முடிவெடுத்தவள் அதன் வருகைக்காக காத்திருந்தாள்.
தூரத்தில் ஒரு பைக் வருவது தெரிந்தது பச் இப்பவும் பைக்கா மனதில் சலித்து போனவள் நிழற்குடை பக்கம் ஓதுங்கி நின்று விட்டாள். இதற்கு மேலும் நிற்க அவளுக்கு தெம்பில்லை... ஆடியதில் களைத்து வேறு போயிருந்தவளுக்கு, கைகால்கள் எல்லாம் வலி எடுத்து ஓய்வுக்கு கெஞ்சிட, மெல்ல சாலையை பார்த்தபடி அமர்ந்து விட்டாள்.
அவளை கடந்து தான் பைக் சென்றது. இருளை விரட்டியடிக்கும் தெருவிளக்குகளின் உபயத்தில் பைக் பின்னால் அமர்ந்திருந்த நபரை எங்கேயோ பார்த்தது போல இருந்தது. பைக் ஓட்டும் ஆசமியோ கோணலும் மாணலுமாய் ஓட்டிக்கொண்டு சென்றான். ஒரு கட்டத்தில் பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த நபர் எதையோ தூக்கி போடுவது போல இருந்தது. அதற்கு அடுத்த நிமிடமே அந்த நபரும் பைக்கில் இருந்து கீழே விழுவதை பார்த்த ரேவதி அய்யோ என்ற அலறலோடு அவ்விடம் விரைந்தாள்.
கீழே விழுந்ததில் கைமுட்டி கால் எல்லாம் சிராய்ந்து எழ முடியாமல் இருந்த அந்த உருவத்தின் அருகில் செல்லும் முன்பே பைக் ஆசாமி அவளிடம் ஏதோ தவறாக நடந்துக் கொள்வது போல் தோன்றியது.
YOU ARE READING
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romanceஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்