அலை 🌊 25

842 13 19
                                    

அழகான விடியலோடு அடுத்த நாள் காலை ஆரம்பமானது. ஆனால் ரேவதிக்கு அது அழகான விடியலா என்று தான் தெரியவில்லை… எப்போதும்  நின்று நிதனமாகவே கிளம்புபவள் இன்று அதித பரப்பரப்புடன் வேளைக்கு கிளம்பினாள். .

காலை முதலே சோர்வு… சோர்வு… சோர்வு… மட்டுமே அவளை ஆக்கிரமிப்பு செய்திருந்தது. முயன்று அதை விரட்டியவளுக்கு, ஏதோ நடக்கப்போகின்றது என உள்ளுணர்வு சொல்லிக்
கொண்டே இருக்க, இதற்கு மேல் நடக்க என்ன இருக்கின்றது என்ற மனநிலையோடு வேலைக்கு சென்றாள்.

பால் பாக்கெட், பேப்பர் போடும் போது, அவளை கண்ட கார்த்திக்கின் பார்வையில் இது தப்பாமல் விழ, ‘என்ன ஆச்சி இவளுக்கு…?’  என, நினைத்துக் கொண்டே இன்றும் தன் ஓட்டத்தை தொடர்ந்திருந்தான். 

ரேவதி, அதே மனநிலையுடன் தான் அலுவலகத்திற்கும் வந்திருந்தாள் . அலுவலகத்திலும் அவள் சோர்வு தொடர்ந்திட, அவளுக்கு உடல் நலன் சரியில்லையோ என நினைத்தான் கார்த்திக். 

ரகுவிடம் கேட்கலாம்‌ என்றாலும், ‘என்ன கேட்பது… எப்படி கேட்பது எனத் தவித்தவனுக்கு நாம்  சற்று  அதிகப்படியாகத் தான் செல்கிறோமோ’ என எண்ணம் வர அந்த கேள்விக்கு  தடை விதித்தவன்,  பிறகு அவளே சொல்லட்டும் என விட்டு விட்டான்.  உணவு இடைவேளை வரை எந்த பிரச்சனையுமின்றி சென்றது அந்த நாள்.

“ரகு,  நெக்ஸ்ட் ப்ராஜக்ட் ஃபைல்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டியா..? வேளச்சேரி வொர்க் முடிஞ்சதும், அடுத்ததை ஸ்டார்ட் பண்ணனும் அதுக்கு எல்லாம் தயாரா இருக்கனும்”,  என்றதும் அவனுக்கு பதிலைக் கூறிவிட்டு  செல்ல இருந்த ரகுவிடம்,

“ம்… அப்புறம் ரகு, ஒரு நிமிஷம் மெட்டிரியல்ஸ் ஃபைல் எடுத்துக்கிட்டு, ரேவதியை என் கேபினுக்கு வரச்சொல்லுங்க” என்றான்.

“ஓகே சார்…” ரகு வெளியே சென்ற, அடுத்து ஐந்து நிமிடங்களுக்குள் ரேவதி கார்த்திக்கின் அறைக்குள் பிரவேசித்தாள்.

“சார் ஃபைல்…”  அவள் நீட்ட ரேவதியை பார்த்துக்கொண்டே வாங்கியவன், அவள் முகத்தில் இருந்த சோர்வை கண்டு, ஏதோ சரியில்லை என்பதை மட்டும் யூகித்து, வேற எதுவும் கேட்காமல், “யூ கேன் கோ ரேவதி…”  என்றான்.

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Where stories live. Discover now