அலை 🌊 41

618 17 9
                                    

ரகுவை வரச்சொல்லி  திவியை அனுப்பி வைத்திருந்திருந்த

கார்த்திக்கின், கவனம்‌ முழுவதும், இங்கிருந்தாலும், ஏதோ ஒன்று அவன் மனதை நெருடிக் கொண்டிருப்பது போல இருந்தது. 

அவன் முறைப்பும் திருப்பும் எதற்கு என அறியாது அமர்ந்திருந்தவளை கவர்ந்தது அவன் தோற்றம்… 

முன்னர் கருத்தில்  படாதது எல்லாம் இப்போது பட்டு தொலைத்து,  அவளை ஈர்த்து கொண்டிருக்க,  கையில் பழச்சாறுடன் அவள் முன்னால் நின்றான்.

காலையிலிருந்து கண்களுக்கு தட்டுப்படாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருந்தவனை ஓரப்பார்வையில் நோட்டம் விட்டவளுக்கு, கார்த்திக் வந்து தன் முன்னே நிற்கவும், திக்கென்று தான் இருந்தது…. 

அதை மறைத்தபடியே சாவகாசமாக தலையை உயர்த்திவது போல தலை நிமிர்ந்தவள், அவனை என்னவென்று பார்த்தாள்.

கையில் வைத்திருந்ததை அவள்‌ முன் நீட்டி குடி என்பதை போல விழிகளால் கோப்பையை சுட்டி காட்டினான்  கார்த்திக். 

ஆடவனின் பார்வையில் இருந்த காரம், அவளை மேலும் கடுப்பாக்கியது. காலையில் இருந்து அவனை தானே தேடியது கண்கள்,  அதை அறியாமல் முறைப்பாக அவன் நின்றிருக்க, பெண்ணுக்கு உள்ளுக்குள் புழுங்கியது.

‘ஏன் வாயை திறந்து சொல்ல மாட்டிங்களா..!!’  அவள் பார்வையால் பதில் கேள்வியை கேட்க, முழுதாய் ஐந்து நிமிடங்களை தன்னுள் விழுங்கிக் கொண்டது அந்த அமைதி. 

அவன் ரேவதியிடம் கோவத்தில் விட்டிருந்த வார்த்தைகளின் வீரியம்  ரேவதியை அவனிடம் பேசிட அனுமதிக்கவில்லை…  தன்னை போய் அப்படி சொல்லி விட்டானே என்ற ஆதங்கமும், அவளை அலைகழித்திட, அவனை பார்ப்பதே போதும் என்ற நினைப்போடு ரேவதி இருந்துக் கொண்டாள்.

‘குடி’ என்பது போல கார்த்திக் மீண்டும் வாய்‌ அருகே பழச்சாறை  எடுத்த செல்ல, அதை மறுத்து முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள் ரேவதி… 

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Tempat cerita menjadi hidup. Temukan sekarang