அந்த வீடு, பார்க்க அரண்மணை போல இல்லாவிடினும் ஏனைய சகலவசதிகளுடன் சற்று பெரியதாக தான் இருந்தது. அந்த தெருவிலேயே இரண்டு மூன்று அடுக்கு மாடி வீடுகளுக்கு சொந்தக்காரன் தான் கஜேந்திரன். அத்தனையையும் வாடகை விட்டு அதிலேயும் கொழுத்த வருமானத்தை பார்த்தான். ஆனால் காஞ்சனாவிடமோ,
"வெளியே சொல்லிக்கொள்ளும் படி வருமானம் இல்லை அக்கா… அதனால தான் உங்கிட்ட கூட வாடகை வாங்குறேன்.. இல்லனா என் அக்காகிட்ட காசு வாங்க நான் என்ன அவ்வளவு கீழ்த்தரமானவனா?..." என்று கண்களில் நீருடன் அண்டப்புளுகு புளுகி நடிப்பான்.
என்ன இருந்தாலும் கூடப்பிறந்த தம்பியாயிற்றே அவன் அழுதால் மனம் தாங்குமா "நீ விடுடா தம்பி, உன் மனசு எனக்கு தெரியாதா?" என்று காஞ்சனாவும் அவனை பின்பற்றி அழ அங்கே பெரும் பாசப்போராட்டம் தான்.
பணம் என்றால் பிணமும் வாயை திறக்குமாம் அப்படிப்பட்டவர்களில் ஒருவன் தான் ரேவதியின் தாய் மாமன். பார்க்க வில்லன் நடிகர் பொன்னம்பலத்தின் மறுபதிப்பகமாய் இருந்தான். வட்டிக்கு விட்டு ரத்தத்தை உறிஞ்சும் மீட்டர் வட்டிக்காரன் கொஞ்சம் ஆபத்தானவனும் கூட,
வாலிப வயதில் சில சட்ட விரோதமான செயல்களிலும் ஈடுப்படதிற்காக சில வருடங்கள் சிறை கம்பிகளை எண்ணி விட்டு வந்தவன் தகப்பன் வாங்கிய கடனுக்கு வட்டியையும் அசலையும் கட்ட முடியாமல் தவித்த மீனாவை அதட்டி மிரட்டி மணமுடித்துக் கொண்டவன் ஒரு பெண் குழந்தையும் பெற்று இருக்கும் நிலையில், இப்போது ரேவதியின் மீது அவன் கழுகு பார்வை பதிந்து விட்டது.
காலையில் சோம்பல் முறித்தபடி எழுந்து அமர்ந்தவனுக்கு டீ கப்புடன் அவன் முன்னாள் பிரசன்னமானாள் மீனா. பார்க்க பழைய நடிகை சரிதாவின் சாயலில் இருந்தவள் பயத்துடனே அவன் முன் நின்றிருந்தாள்.
அந்த அறையில் மீனாவை பார்த்தவுடனே ஏகத்திற்கும் பிபி ஏறியது அவனுக்கு, கோவத்தில் பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டலை அவளை நோக்கி வீசி எறிய அது சரியாய் அவளது கையில் இடம்பெற்றிருந்த டீ கப்பை தாக்கி, சுட சுட டீ அவளது கைகளிலும் காலிலும் அபிஷேகம் செய்தது.
YOU ARE READING
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romanceஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்