அலை 🌊 48

524 19 11
                                    

ஹாய் டியர்ஸ்... பசங்களோட லீவுக்கு ஊருக்கு போயிட்டேன்... வந்ததும் மழை நான் செட்டில் ஆகவே நாள்‌ எடுத்துடுச்சி... இதுல இந்த எபி கொஞ்சம் எமோஷனல் எபி அதான் லேட் ஆகிடுச்சு படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

.......

அலை  48

அதிகாலை கனவில் தோன்றும் கணவனின் அழுத்தமான அணைப்புகளும் முத்தங்களும் இல்லாமல்  நான்கு ஐந்து நாட்களாக ஏதோ ஒன்றை குறைந்ததை போல உணர்ந்திருந்தாள் ரேவதி.

தன் போக்கில் வருவதும், போவதும், உண்பதும் உறங்குவதும் என இருக்கும் கணவனின் மேல்  கோவத்துடன் சுத்திக் கொண்டிருந்தவளது மனம் கணவனின் அன்பையும் அக்கரையையும் எதிர் பார்த்து ஏமாற்றம் கொண்டது..

“உனக்கு இந்த பந்தம் பிடிக்கல… என்னோட வாழப்பிடிக்கலன்னு ஆயிரம் பேச்சி பேசுவார்…. என் மனசுல இருக்கறது தெரிஞ்சும் அதை பத்தி ஒன்னுமே கேக்கல…” உள்ளுக்குள் பொங்கிக் கொண்டு வந்தது அவளுக்கு,. 

உள்ளே புகைந்து கொண்டிருந்தது ஒரு நாள் கொழுந்து விட்டு எரிய போவது தெரியாமல் தன் யோசனையில் ஆழ்ந்து இருந்தான் கார்த்திக். 

மனைவியிடம் அத்து மீறும் கார்த்திக் மறைந்து தங்கையின் பிரிவை எண்ணி கலங்கும் கார்த்திக்காய் மாறி இருக்க மனைவியின் மாற்றங்கள் கண்களுக்கு புலப்பட்டாலும், கருத்தில் பதியாமல் போனது விதி செய்த சதியோ… 

தெளிந்த நீரோடை போல தங்கு தடை இல்லாமல் சென்றுக்  கொண்டிருக்கும்  பாதையில் கல்லை எரிந்தது போல் கார்த்திக்கின் மௌனத்தை கலைத்தது ரகுவிடமிருந்து வந்த அலைபேசி அழைப்பு,

“ம் சொல்லு ரகு …. இஞ்சினியர் கிட்ட இருந்து  டிராயிங் வந்துடுச்சா…?”

“ஆமா… சார்…  உங்க மெயிலுக்கு அதை அனுப்பி இருக்கேன்…” தன்மையுடன் வந்தது ரகுவின் குரல்.

“ம் சரி ரகு நான் பார்த்துட்டு உங்களுக்கு அனுப்புறேன்… நாளைக்கு வொர்க் ஸ்டார்ட் பண்றதை பத்தி பேசலாம்…” என்றவன் அதில் முனைப்பாகி விட்டான்.

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Where stories live. Discover now