🌊அலை 9 🌊

467 11 2
                                    

" சார்.... கார்த்திக் சார்...." கண்களை மூடி இருக்கையில் சாய்ந்திருந்தவனை கலைத்தது ரகுவின் குரல். மெல்ல விழிகளை திறந்தவனுக்கு எதிரில் நின்றிருந்தான் அவன் .

விழிகள் சிவந்து, உடல் அசதியில் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் காரில் இருந்து இறங்கியவன், "எந்த வார்டுல அட்மிட் பண்ணி இருக்காங்க ரகு... அவரோட நிலமை இப்போ எப்படி இருக்கு... பிளட் கிடைச்சிடுச்சா... ஏதாவது மெசேஜ் வந்துச்சா" கேள்விகளை அடுக்கிய வண்ணம் கார்த்திக் தன் நடையை துரிதப்படுத்தி மருத்துவமனையை நோக்கி வேகமாக நடந்தான்.

ரகுவிற்கு கார்த்திக்கின்‌ உடல் நிலை குறித்து சிறிது சந்தேகமாக இருந்தது. கிளம்பும் முன் தலை வலி என்று கூறியவனின் கண்கள் இப்போது சிவந்து சோர்வாக தென்ப்பட்டது... ஒருவேளை காய்ச்சல் கண்டு இருக்குமோ என்ற அனுமானம் கூட வந்தது.... இருந்தும் சட்டென கேட்டுவிட முடியாதே!!!... முன்னர் கேட்டதுக்கு ஒன்றுமில்லை என்று கடின முகத்துடன் கூறி அந்த பேச்சிற்கு முற்று புள்ளி வைத்துவிட்டான்... மீண்டும் கேள்வி எழுப்பி அவனிடம் வாங்கி கட்டிக்கொள்ளவதா என்று நினைத்து, கேட்க இருந்த மனதினை தலையில் குட்டி அடக்கி வைத்தவன் அவன் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலை கூறிக்கொண்டிருந்தான்.

"சார் ஐசியூ ல அட்மிட் பண்ணி இருக்காங்க.... கொஞ்சம் கிரிட்டிக்கல் தானாம் சார்... தலைல ஹெவி இன்ஜூரி சைட் மேனேஜர் அங்க தான் இருக்காரு... பிளட் மட்டும் ஒரு யூனிட் தான் கிடைச்சதாம் இன்னும் தேவைப்படுதாம்... " யார் என்ன என்பது தெரியவிடினும் அதுவும் ஒரு உயிர் ஆயிற்றே விபத்துக்கு உள்ளானவனை நினைத்து ரகு வருத்தத்துடன் கூறினான் .

நடந்துக் கொண்டிருந்தவனின் கால்கள் சட்டென தடைப்பட்டு நின்றிட... "எங்கேயுமேவா கிடைக்கல.... என்ன பிளட் க்ரூப் " சிகையை அழுத்தி கோதியபடி ஐசியூ நோக்கி சென்றது அவன் கால்கள்.

"AB பாஸிட்டிவ் சார் ... அதான் கொஞ்சம் டிளே ஆகுது... நானும் தெரிஞ்சவங்க கிட்ட இன்பார்ம் பண்ணி இருக்கேன் ... " ரகு கூறியதும் கண்களை அழுத்த மூடி திறந்தான். அவனுக்கும் அதே பிளட் க்ரூப் தான் இருந்தும் என்ன ப்ரயோஜனம் காய்ச்சல் இருப்பதால் இப்போது கொடுக்க முடியாதே... சற்று நேரம் யோசித்தவன், தன் கைப்பேசியை எடுத்து தங்கைக்கு அழைத்தான்.

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Where stories live. Discover now