திவ்யாவிடம் போன் பேசிக் கொண்டிருந்தவன் பார்வையில்
ரேவதியின் மேல் இருந்த போர்வை சற்றே விலகி இருப்பது போல் படவும், அதை சரி செய்ய நீண்ட அவன் கையை இறுக்கி பிடித்து தன் தூக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தாள் ரேவதி.ரேவதியின் திடீர் செய்கையில் திடுக்கிட்ட கார்த்திக் சற்றே கவனம் பிசகினாலும் தன் விலாசத்தை கூறி, அவர்களை வரச் சொல்லி போனை வைத்தான். அவளையும் தன் கையையும் மாறி மாறி பார்த்தவன் பார்வை, சீராண சுவாசத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் தன் விரல்களை பிடித்தபடி உறங்கும் ரேவதியின் முகத்தின் மேல் நிலைத்திருந்தது. நடுநடுவே ஏதோ உளறியபடியே இருக்க இதழ்களின் அருகே காதை வைத்து அதை கூர்ந்து கவனித்தான்.
"ப்ளீஸ் ராகவ்… ப்ளீஸ் என்னை வற்புறுத்தாத… என்னால முடியாது… எனக்கு இதுல விருப்பமில்ல…" ரேவதி முனங்கியபடியே உருண்டு அவன் புறம் படுத்தாள்.
முன்பு போல் அவள் முழித்திருக்கிறாளோ என்ற சந்தேகம் இப்போது எழவில்லை… குழந்தையை போல் உறங்கிக் கொண்டிருந்தவளின் கையினை விலக்கவும் எண்ணமில்லை… சிறு புன்னகை அவன் இதழ்கள் உதிர்த்ததோ என்னும் அளவிற்கு இருந்த தன் அதரங்களை இறுக்கி அவன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவன் இந்த வார்த்தைகளை கேட்கவும் அப்படியே மெத்தையில் அமர்ந்து விட்டான்.
சற்று நேரம் வரை முழித்திருந்தவன், உடல் அசதியிலும் கலைப்பிலும்
லேசாக கண் அசந்திருக்க, மீண்டும் திவ்யாவிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. அவள் தூக்கம் கெடாதவாறு தன் விரல்களை அவளிடமிருந்து பிரித்துக் கொண்டவன், அறையை விட்டு வெளியேறி போனை ஆன் செய்திட திவி தான் அழைத்திருந்தாள்."வெளியே தான் வெய்ட் பண்றேன் வாங்க…"
…..
"ம்…" போனை அணைத்து பாக்கெட்டில் வைத்தவன் அவர்களுக்காக வெளியே காத்திருந்தான்.
கேட் வாசலில் கேட்ட ஆட்டோ சத்தம் காம்பவுன்டினை தாண்டி வீட்டிற்கு முன் நின்றது.
KAMU SEDANG MEMBACA
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romansaஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்