கைகளிலும் முகத்திலும் இருந்த காயங்கள் ஓரளவுக்கு குணமாகி இருக்க, நடக்க மட்டுமே சற்று சிரமப்பட்டவன் வாக்கிங் ஸ்டிக் துணையுடன் நடந்து வந்தான் ராகவ்.
மனைவியும் வலுக்கட்டாயமாக அவன் கைபிடித்து உடன் வர, அவள் அருகாமை தந்த கடுகடுப்பில் முகம் கடுமை மாறாது, தன் முன்னால் கால் மேல் கால் போட்டு ராஜ தோரணையுடன் அமர்ந்திருக்கும் கார்த்திக்கை பார்த்தான்,.
அவனை யார் என தன் நினைவடுக்குகளில் கொண்டு வரும் முயற்சியில் இருந்தான் ராகவ். அவன் என்ன முயன்றும் கார்த்திக்கை எங்கும் பார்த்தது போல் ஞாபகம் வராமல் போனது...
கூடவே ஊரில் முக்கிய அரசியல்வாதியும் அவனுடைய ஆட்களும் அமர்ந்திருக்க,
சுத்தமாக அவர்களின் வருகை எதற்கு என அறியாமல் குழப்பினான்,
தன் குடும்பத்து ஆட்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு கார்த்திக்கிடம் திரும்பியவன்,
"சார் நீங்க என்னை பார்க்குனும்னு சொன்னிங்களாம்... யார் நீங்க...? உங்களை இதுவரை நான் பார்த்தது இல்லை... எதுக்காக நீங்க என்னை பார்க்க வந்திங்க...?" என்றான் தன்மையாகவே,
ஏற்கனவே ராகவ் செய்த வேலையில் இறுகி இருந்த கார்த்திக்கின் முகம், அவனது மனைவி மீனாட்சியை பார்த்ததில் கடுமையாகி, கார்த்திக்கின் கொதிப்பை அதிகப்படுத்தியது...
தன் மனைவியை அடித்து அவமானப்படுத்தி நிலைகுலைய செய்த மீனாட்சியின் தரம் கெட்ட பேச்சுக்கள் நினைவில் வந்து இம்சை செய்ததில்,
கை முஷ்டிகள் தன்னால் இறுக்கம் கொள்ள,
தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர மிகுந்த சிரமப்பட்டவன்,
"இனியும் உன் வாழ்க்கையில் நீ என்னை பாக்க கூடாதுன்னு வேண்டிக்க...
அவன் முழு உயரத்திற்கும் எழுந்து நின்ற கார்த்திக், நெஞ்சை நிமிர்த்தி, கடுமையான குரலில் எச்சரிக்கை விடுத்ததில் அவனை அண்ணாந்துதான் பார்த்தான் ராகவ்.
YOU ARE READING
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romanceஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்