மழை அடித்து ஓய்ந்து இருந்தாலும் மரத்திலிருத்து சிந்தும் தூறல் போல சில கசப்பான நிகழ்வுகள் நடந்து முடிந்திருந்தாலும், அதிலிருந்து வெளிவர முடியாத அளவுக்கு கஜேந்திரனின் மனைவி மீனா வந்து சென்ற தாக்கத்தில் , இருளை வெறித்துக் கொண்டிருந்தார் காஞ்சனா.
பதினைந்து நாள் ரிமாண்டில் வைத்து கோர்ட்டில் விசாரணை ஆரம்பித்து இருந்தது… இனி அடுத்த மாதம் தான் விசாரணை என்றும் அதுவரை அவனை மத்திய சிறைச்சாலையில் அடைத்து வைத்திருப்பதாக மீனா தகவலை சொல்லி இருந்தாள்.
கணவனுக்கு எதிரான முக்கிய சாட்சியமே அவள் தானே… அவனிடம் கிடைத்த அடி உதையில் உருக்குலைந்து போயிருந்தவள், இந்த பதினைந்து நாளாக தானே நிம்மதியாக இருக்கிறாள்.
தனக்கும் தன் குழந்தையின் எதிர்காலத்திற்கும் ஒரு வேலையை தேடிக்கொண்டு, மகளையும் அழைத்துக் கொண்டு வந்தவள், காஞ்சனாவிற்கு தைரியமும் சொல்லி விட்டு சென்றிருந்தாள்.
தன் கண்களுக்கு மட்டும் ஏன் அவன் தவறு தெரியாமல் போனது, பெற்ற மகளின் வார்த்தைகளை அப்போதே நம்பியிருந்தால் தன் மகள் சுகப்பட்டு இருப்பாளே அவனை விலக்கி வைத்திருந்தால் இது எல்லாம் நடக்காமல் தடுத்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றி அவரை மேலும் கலங்க வைத்தது.
மகள் ஆசை ஆசையாக சாப்பிடும் மீன் குழம்பையும் இறால் வறுவலையும் எடுத்து வைத்து, இன்றாவது தன் மகள் கோபத்தை விடுத்து தன் கையால் சாப்பிடுவாளா என எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தார் காஞ்சனா..
நேரம் எட்டை தாண்டி சென்றுக் கொண்டிருக்க, “அம்மா எங்க இருக்கிங்க…?” காஞ்சனாவை அழைத்தபடியே வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தான் சிவா.
அண்ணாச்சி கடையில் வேலைக்கு செல்வது தெரிந்து கார்த்திக் சிவாவை அழைத்து பேசி இருந்தான்.
“உங்களுக்காக எது வேணும்னாலும் செய்றேன் மாமா… ஆனா, வேலைக்கு மட்டும் போக வேண்டாம்னு சொல்லாதிங்க ப்ளீஸ்…” அக்காவை போலவே தன்மானத்தில் குறையாதிருந்தான் சிவா.
YOU ARE READING
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romanceஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்