அலை 🌊 21

612 13 8
                                    

அவளிடம்  வேலையை சொல்லி அனுப்பியவன் கவனமாக ரேவதியை பார்ப்பதை தவிர்த்தான்.  எடுத்த முடிவில் மாறாது இருக்க மிகுந்த கவனத்தோடு இருந்தான்.

காலை வேளை பரபரப்புடன் போய்க் கொண்டிருந்தது அலுவலகம்.   அப்போது  அலுவலகத்திற்கு வந்த தேவராஜ் எல்லோருடைய வணக்கங்களையும் சிறு தலை அசைப்புடன்  பெற்றுக் கொண்டு நேராக மகனின் அறைக்குள் நுழைந்தார்.

கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்து பார்த்தவன் “வாங்கப்பா வாங்க…  நீங்க இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கலாம் ல ப்பா வேலையை நான் பார்த்துட்டு இருப்பேன் ல… இத்தனை நாள் நான் இல்லாம நீங்க தான் எல்லா வேலையும் பார்த்துக்கிட்டு  இருந்திங்கன்னு அம்மா காலைல இருந்து ஓரே புலம்பல்” தந்தையை  வரவேற்று அமர வைத்தவன்  அக்கறையுடன் கேட்டான்…

"உங்க அம்மா தானே எப்பவும் அப்படித் தான்…  நான் சும்மா வீட்டுல இருந்தா கூட அவளுக்கு சந்தோஷம் தான்... என்னை எப்போ வீட்டுல உட்கார வைக்கலாம்னு பார்த்துட்டு இருக்கா"

சிரித்துக் கொண்டே கூறியவர்

"வேலை எல்லாம் பாத்தியா கார்த்திக்... கிராப் எப்படி இருக்கு...? வொர்க் சரியா போயிட்டு இருக்கா…?" மகனிடம் தொழிலை பற்றி விசாரித்தார்.

"ஓகே தான் பா… எவ்ரித்திங் குட் நல்லாவே போயிட்டு இருக்கு... இதே லெவில் போனா இன்னும் கிராஃப் கூடும்... அடுத்த‌ மாசமே வொர்க் முடிச்சி ஹேண்ட் ஓவர் பண்ணிடலாம்"

என்றான் பெருமையாகவே…

"குட்... ம் அப்புறம் அந்த பொண்ணு …ம் ரேவதி… பாத்தியா...?"  பேசிக் கொண்டே மகனின் கண்களை  கவனமாக ஆராய்ந்தார் தேவராஜ்…

சட்டென விரிந்த கண்கள் தந்தையின் ஆராய்சி பார்வையில் உடனே சகஜநிலைக்கு திரும்பி விட,

" பார்த்தேன் பா.... என்ன திடீரென்னு வேலை எல்லாம் கேட்டு வந்திருக்காங்க… வரமாட்டேன்னு ல சொல்லிட்டு இருந்தாங்க… இட்ஸ் அன்பிலிவபல் பா…  தந்தையிடமே" போட்டு வாங்கினான் கார்த்திக்.

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Donde viven las historias. Descúbrelo ahora