கணவனுக்கும் வீட்டிற்கும் தெரியாமல் ஒரு செயலை செய்ய போகிறோம் என்ற எண்ணமே அவளை சங்கடத்திற்கு உள்ளாக்கியது.
கையில் இருந்த மொபைலை அழுத்தமாகப் பற்றிக் கொண்டவள், நேரத்தைப் பார்க்க அது மாலை நேரம் 5. 30 எனக் காட்டியது.
“அண்ணா… அஷ்டலட்சுமி கோவிலுக்கு போகணும்…” வழியில் எதிர்ப்பட்ட ஆட்டோவை நிறுத்தி ஏறிக் கொண்டாள் ரேவதி.
வானம் தெளிந்திருந்தாலும், அவள் மனம் கரும்புகை சூழ்ந்தது போல் தெளிவில்லாதிருந்தது.
நேர் வகிடெடுத்து இறுக்க பின்னிய கூந்தல் , நெற்றியில் வைத்திருந்த திலக பொட்டும் மையெழுதிய பெரிய அகலமான கண்களும், பயிற்சியின் போது கலைந்த முடிகற்றைகள் ஒன்றிரண்டு, முகத்திலும் நெற்றியிலும் ஓட்டிக்கொண்டு, அவள் சோர்வை அப்பண்டமாக காட்டினாலும்,
அவள் முகத்தில் தெரிந்த தேஜஸில் கோவில் சிலைப்போல் அத்தனை அம்சமாக இருந்தவள், அஷ்டலட்சுமி கோவிலின் அருகில் இறங்கிக் கொண்டாள்.
கடல் காற்று இன்னுமே அவளை குழலைக் கலைத்து விளையாடியதில் முகத்தில் படர்ந்த முடிக்கற்றைகளை காதோரம் ஒதுக்கி விட்டு கோவிலை ஒட்டி நடந்தாள்.
கணவனிடம் அம்மாவை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு நடன பள்ளியில் இருந்து வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக சஞ்ஜையை பார்க்கத்தான் செல்கிறாள்.
‘இங்க தானே வரேன்னு சொன்னார்…’ பார்வையை நாலா புறமும் சுழற்றி தேடியவள், தான் வந்துவிட்டதை அவனுக்கு குறுந்தகவலாக அனுப்பி விட்டு கோவிலுக்குள்ளே நுழைந்தாள்.
திருமணம் முடிந்து ஓரிரு முறை கணவனுடனும் சுஜாவுடனும் இங்கு வந்து இருக்கிறாள்.
அப்போதெல்லாம் தெரியும் கடலின் அழகும், ஆர்பரிப்பும் இப்போது கடுகளவு கூட அவள் கருத்தில் பதியவில்லை.. எண்ணமெல்லாம் இந்த பிரச்சனையை எப்படி கையால்வது என்று தான் இருந்தது.
STAI LEGGENDO
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Storie d'amoreஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்