அலை 30
ரகு முழுதாய் சொல்லி முடிக்கவும், தேவராஜ் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி இருந்தார்.
கார்த்திக் ரேவதியுடன் திருமண கோலத்தில் வந்து நின்றதுமே மனம் சுருக்கென்று தைத்தாலும் ஏதோ பலமான காரணம் உள்ளதென்னு அனுமானித்திருந்தார்.
ஆனால் இதை முற்றிலுமாக எதிர்ப் பார்க்கவில்லை ரேவதியை நினைத்து சற்று வருத்தமாகக் கூட இருந்தது.
தேவராஜின் யோசனையான முகத்தை பார்த்தான் ரகு,
“கார்த்திக் சார் தவிர்க்க முடியாத சூழ்நிலையில தான் ரேவதியை கல்யாணம் பண்ணிக்கிட்டார் பாஸ் “
எங்கே கார்த்திக்கின் மனம் இவருக்கு தெரிந்துவிடுமோ என்ற எண்ணத்தில் தேவராஜிடம் உரைத்திருந்தான் ரகு.
அவருக்கு தெரியாதா பிள்ளையின் மனம் பற்றி முன்னர் சந்தேகமாக இருந்தது இப்போது உறுதியாகி விட்டதே, மெல்லிய சிரிப்புடன் ரகுவின் முதுகில் தட்டிக் கொடுத்தவர்,
“கார்த்திக் மேல அவ்வளவு அக்கரையோ” கிண்டலுடன் ரகுவை பார்த்தார்.,
அவர் பேச்சும் செயலும் அவனுக்கு ஒருவித கிலியை கொடுத்திட, “பாஸ்…” என்றான் பதறிக்கொண்டு…
“நான் உங்க கார்த்திக் சாரோட அப்பன் ரகு....” மெலிதாக சிரித்தார் தேவராஜ்.
அவர் சிரிப்பும் இந்த இலகுத்தன்மையும் ரகுவிற்கு ஆச்சர்யத்தையும் குழப்பத்தையும் ஒருசேர கொடுத்தது.
‘ஒருவேளை இவருக்கு கார்த்திக் சாரை பத்தி முன் கூட்டியே தெரிந்து இருக்குமோ’ சந்தேகமாக அவரை பார்த்தான்.
அவனின் ஆராயும் பார்வையும் குழப்ப முகத்தையும் பார்த்தவர் 'என்ன...?' என்பதாய் புருவம் சுருக்க,
தேவராஜின் பார்வை மாற்றத்திலேயே அவரின் கேள்வியை அறிந்துக் கொண்டவன்,
"ந... நத்திங் பாஸ் "
ரகு திணறிட அவனை, தட்டிக்கொடுத்து சரி நீ கிளம்பு என ரகுவை அனுப்பியவர் மனைவியை தேடிச் சென்றிருந்தார்.
YOU ARE READING
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romanceஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்