"இந்த பொண்ணு வர்றதுக்கு நேரமானா ஒரு ஃபோனையாவது பண்ணலாம்ல…? மணி பன்னிரண்டு ஆகப்போகுது இந்நேரம் வரை வீட்டுக்கு வரலன்னா என்னன்னு நினைக்கிறது…
ஃபோனை பண்ணாவும் சுவிட்ச் ஆப்னுன்னு வருது…" காஞ்சனா புலம்பியபடியே தன் போனை சிவாவிடம் கொடுத்து திவ்யாவிற்கு அழைத்து விசாரிக்கச் சொன்னார்.
பத்து மணி இருக்கும் போது ஹோட்டலில் இருந்து கிளம்பிவிட்டேன் என்ற தவலை வீட்டுக்கு தெரிவித்தவள் இதுவரையிலும் வரவில்லை என்றால் என்ன நினைப்பது. இப்போதே மணி பன்னிரண்டு இதற்கு மேலும் நேரத்தை கடத்த விருப்பமின்றி தாய் தம்பி இருவரும் அவளை தேடுவதற்கு துவங்கிவிட்டனர்.
காஞ்சனாவிற்கும் சிவாவிற்கு வயிற்றில் புளியை கரைத்தது. மெல்ல விழிகளில் நீர் படலம் உருவாகிட சிவா திவ்யாவை அலைபேசியில் அழைத்தான்.
"அக்கா…."
கண்ணை பாதி திறந்தும் திறவாமலும் தூக்க கலக்கத்துடன் எழுந்தவள் "என்னடா சிவா…? இந்த நேரத்துல கால் பண்ற…?" கொட்டாவி விட்டபடியே ஃபோனை எடுத்தாள் திவ்யா.
"அக்கா… நீங்க வீட்டுலயா இருக்கிங்க…? ரேவதி அக்கா உங்க கூட இல்லையா..?" அதிர்ச்சியும் பதற்றமுமாக விசாரித்தான் சிவா.
அவன் கேட்ட கேள்வியில் அடித்து பிடித்து படுக்கையை விட்டு எழுந்தவளுக்கு தூக்கம் பின்னங்கால் புறணியில் அடித்து எங்கு ஓடியது என்றே தெரியவில்லை… "என்னடா சொல்ற… ரேவதி இன்னும் வீட்டுக்கு வரலையா…?" என்றாள் அதிர்ச்சியாக
"ஆ… ஆமாக்கா இன்னும் வீட்டுக்கு வரல… போன் பண்ணாலும் சுவிட்ச் ஆஃப்னு வருது… சரி பஸ் கிடைக்க லேட்டாகி இருக்கும்னு கொஞ்சம் வைட் பண்ணோம்… ஆனா இந்நேரம் வரை அக்கா வரலை… போன் பண்ணி ரெண்டு மணி நேரம் ஆகுது அதான் பயமா இருக்கு" என்றான் சிவா நீர் திரையிட்ட கண்களுடன்.
அவன் குரலை வைத்தே அழுகிறான் என்பதை யூகித்திருந்தவள் "டேய் நீ ஏன்டா பயப்புடுற அவளுக்கு ஒன்னும் ஆகாது போன் சார்ஜ் இல்லாம ஆப் ஆகி இருக்கும். இன்னும் கொஞ்ச நேத்துல வந்துடுவா டா… இன்னைக்கு அக்காவுக்கு துணையா வீட்டுல இருக்க சொன்னதுனால என்னால அவ கூட போக முடியல…" தன் தலையில் தானே அடித்துக் கொண்டவள் "நீ பயப்படாத நான் இதோ வந்துடுறேன்" அவனிடம் தைரியமாக இருக்க சொன்னவள் இரவு பதினோரு மணியை போல் வீடு திரும்பிய தந்தையை எழுப்பி விஷயத்தைக் கூறி, அடுத்த ஐந்து நிமிடத்தில் ரேவதியின் வீட்டை அடைந்திருந்தவளுக்கு உச்சஸ்தாயில் கத்தி கொண்டிருந்த கஜேந்திரனின் குரல் நாராசமாக காதில் விழுந்தது.
YOU ARE READING
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romanceஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்