இரு கைகளாலும் தலையை தாங்கி பிடித்தபடி தன் அலுவலக அறையினில் அமர்ந்திருந்தான் கார்த்திக். அவன் அறைக்குள் நுழைந்த ரகு கார்த்திக் அமர்ந்திருக்கும் நிலையை பார்த்து விட்டு "சார் உங்களுக்கு என்ன சார் ஆச்சி உங்க உடம்புக்கு ஏதும் முடியலையா?... " அவனிடம் பேசியபடியே ரகு, உதவியாளரை அழைக்க இன்டர்காமின் ரிசிவரை எடுத்தான்.
"ஆமா ரகு… தலைவலி தெறிக்குது ஸ்டராங்கா ஒரு காபி சொல்லு… மீட்டிங் முடிஞ்சி அப்பா வந்துட்டாரா?...." கார்த்திக் பதிலுக்காக ரகுவை பார்த்தான்
உதவியாளரை அழைக்க இருந்தவன் அவன் தலைவலி என்று கூறியதும் "காபி சொல்லிட்டேன் சார், இப்போ வந்துடும்… எம்.டி. சார் வந்துட்டாரு மீட்டிங்ல இருக்காரு… மீட்டிங் முடிய இன்னும் அரைமணி நேரம் ஆகும்" கூடுதலாக தகவலை உரைத்து ரகு வெளியேறிட, அடுத்த ஐந்து நிமிடத்தில் நாசியை நிறைத்தது காபியின் நறுமணம்.
காபியின் நறுமணம் அவன் தலைவலியை சற்று மட்டுபடுத்தி இதம் அளித்திருக்க, "சார்" அனுமதி கேட்டுக்கொண்டே சுவற்றில் அடித்த பந்தை போல மறுபடி கதவை திறந்து உள்ளே வந்தான் ரகு.
ரகுவின் அழைப்பில் கேள்வியாக அவனை பார்த்தான் கார்த்திக். "உங்களை பார்க்க மிஸ் நிஷாந்தி வந்திருக்காங்க சார்… ரிசப்ஷன்ல வைட் பண்ண சொல்லி இருக்கேன்". அவன் பார்வைக்கு பதில் உரைத்திருந்தான் ரகு.
"வாட்" நிஷாந்தி வந்திருப்பதை அறிந்ததும் அசூயையாக உணர்ந்தவனுக்கு விட்ட தலைவலி மறுபடி ஒட்டிக்கொண்ட உணர்வு.
அவளால் தானே வீட்டிற்கு செல்லாமல் அலுவலகமே கதி என கிடந்தான். இங்கும் வந்து நின்றால், அவனும் என்ன தான் செய்வான். பாவம் அதட்டி பேசி மனதையும் உடைக்க முடியவில்லை
"சார்" ரகு சற்று சத்தமாக அழைக்க தன் சிந்தனையில் உறைந்து நின்றவனை கலைத்தது அவன் குரல்.
தன் பதிலுக்காக காத்து நிற்பவனை பார்த்த் கார்த்திக் " ரகு… அப்பா கிளம்பிட்டாரா" குரலில் ஏதோ ஒரு அசௌகரியம். அவனுக்கு இந்த விஷயம் தந்தை வரை செல்லவதில் விருப்பமில்லை…
ESTÁS LEYENDO
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romanceஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்