அலை 35

447 16 7
                                    

பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சென்னை மாநகரத்தை போலவே, ரேவதியும் பரப்பரப்புடன் ஆட்டோவில் இருந்து இறங்கி அலுவலகத்தை நோக்கி நடந்துக் கொண்டிருந்தாள்.

கார்த்திக்கின் புரியாத பேச்சிலும், ஊசிப்போல் குத்தும் பார்வையிலும், சிக்கிக் கொள்ளாமல் இன்று எப்படியாவது  வேலையை சீக்கிரமே முடித்து  வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன், முதல் நாள் போல் அழுது வடியாமல்  சீக்கிரமே அலுவலகம் வர நினைத்தாள் ரேவதி. நேற்று மாலை வெகு நேரம்  மூளையை கசக்கி பிழிந்து யோசித்ததின் விளைவு, இத்தனையும்…

அவள் வரும் போது தான் ரகுவும் அலுவலகம் வந்திருந்தான். ரேவதியை கண்டவன் அவளை பார்த்து மெச்சுதலாக புன்னகைக்க, ரேவதியின் முகத்திலும் புன்னகையின் சாயல் தோன்றியது. 

“குட் மார்னிங் ரேவதி… என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க…?”  ஆச்சர்யமான பாவனையுன் அவளை பாரத்தான் ரகு.

மலர்ந்த முகத்துடன் புன்னகையித்தவள்,

 “குட் மார்னிங் ரகு சார்.., 

கொஞ்சம்  முடிக்க வேண்டிய வேலை பெண்டிங் இருக்கு அதான் இயர்லியா வந்துட்டேன்…” 

நின்று, இரண்டொரு வார்த்தை ரகுவிடம் பேசியவள் அதோடு தன் பகுதிக்கு சென்று விட்டாள். 

எல்லோருடனும் இயல்பாக பேசினாலும், யாரிடமும் அதீத நெருக்கத்தை காண்பிக்காத ரேவதிக்கு,  ரகுவிடம் அந்த விலகலை கடைபிடிக்க முடியவில்லை… நட்புடனும் சகோதரத்துடனும் பழகும் அவனை தள்ளி நிறுத்த முடியாமல் சிரித்த முகமாகவே பேசி சென்றிட  , அவள் சென்ற திக்கையே பார்த்திருந்தவன் சிறிது நேரம் கழித்து அவனும் அங்கே சென்று தன் வேலையை தொடர்ந்தான்.

முன் தினத்தை போன்று அதிக வேலை பளுவை கொடுக்காமல்,  அவளால் முடிந்த வேலைகளை கொடுத்தவன், அவளை கொஞ்சம் சுதந்திரமாக விட்டிருந்தான்.

கார்த்திக் கேட்டதும் இதைத் தானே…  அவளுக்கு வேலையை குறைத்து கொடுத்து அவள் பக்கத்திலும் இருந்துக் கொண்டான் ரகு. 

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Where stories live. Discover now