அலை 🌊 22

476 14 1
                                    

என்ன தான்‌ முன்னுக்கு‌ பின் முரனாக மகள் செய்தாலும் ஒரு நிலைக்கு மேல் கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல் அவள் போக்கிலேயே விட்டு விட்டார் காஞ்சனா. 

ஒருவாரமாக மகள் மாங்கு மாங்கென்று வேலையைத் தேடிய தேடலைக் கண் கூடாகப் பார்த்துக் கொண்டு இருந்தவர் தானே,  அதனைக் கொண்டே மகளை அதிகம் பேசாமல் இருந்தார்.

அலுவலகம் முடிந்து அவள் வீடு வந்து சேர இரவு எட்டை தொட்டு இருந்தது. இந்தப் பத்து நாளும் சீக்கிரமே வரும் மகளைக் கண்டு காஞ்சனாவிற்கு சற்று ஆறுதலாக இருந்தது.

ஒவ்வொரு நாளும் இரவு நேரம் தவறி வரும்போதேல்லாம்  தவிப்புடன் தானே வெளியே நின்றுக் கொண்டு இருப்பார். அது இப்போது இல்லாமல் இருப்பதே அவருக்கு நிம்மதியாக இருந்தது.

காஞ்சனாவை பொறுத்தவரை நாட்கள் எந்த வித தொய்வுமின்றி அழகாக நகர்ந்து கொண்டிருப்பது போலத் தான் இருந்தது..  களைப்புடன் அமர்ந்த  ரேவதியிடம்  "கைக்கால கழுவிட்டு வா‌ ரேவதி சாப்பாடு‌ எடுத்து வைக்கிறேன்" என்றார் காஞ்சனா.

சில நாட்களாகவே தாயின் போக்கில் வியப்பின் உச்சியில் இருந்தவள் இப்போது அழைக்கவும், கண்கள் சாசராய் விரிந்து கொண்டது.

"ரேவதி…. என்ன அப்படி பாக்குற சாப்பிட வா" நின்றுக்கொண்டே தூங்கும்‌ மகளைத் தோளில் தட்டி விட்டுச் சென்றார் காஞ்சனா,

"அம்மா நீதான் கூப்பிட்டியா…?" வியப்பாய் கேட்ட மகளின் குரலில் இருந்த உற்சாகத்தை கண்ட காஞ்சனா,

மலர்ந்த முகத்துடன் "என்னடி கேள்வி இது … இங்க உன்னையும் என்னையும் தவிர யார் இருக்கா‌‌… உன்னைத் தான் கூப்பிட்டேன் ஒழுங்கா சாப்பிடு…" சாப்பாடு தட்டைக் காண்பித்தார் அவர்.

"அப்பா…  இப்போ தான் நிம்மதியா இருக்கு…  எப்போ பார்த்தாலும் உர்னு இருப்பியா என்னடா நம்ம அம்மா முகம் பாக்கவே சகிக்கலன்னு தோனும் ஆனா இப்போ நீதான் மா உலக அழகி மாதிரி இருக்க" தாயின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் வைத்தாள் ரேவதி.

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Where stories live. Discover now