அலை 🌊 37

406 17 6
                                    

நிலவையே கொள்ளை கொண்ட இரவுக்கு துணையாய் விழித்திருந்தவளின் தும்பை நிற விழிகள், சிவந்து செவ்வரோடி, இமைகள் சற்றே தடித்திருந்தது.

எதை நினைக்கவோ யோசிக்கவோ வேண்டாம் என்று விலகி செல்ல நினைத்தாளோ அதையே இரவெல்லாம் நினைத்து நினைத்து தன்னை தானே நிந்தித்துக் கொண்டிருந்தாள் ரேவதி.

அவளின் அல்லி விழிகளை மூடும் போதெல்லாம்,

அவன் கோபத்தை அடக்கி நின்றிருந்த தோற்றமே மின்னி மறைந்ததில், அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவளுக்கு தூக்கம் தூரமாய் போய்விட்டது.

மெல்ல மெல்ல அவள் மனதில் அடியெடுத்து வைத்திருந்தவன் இன்று விஷ்வரூபமாய் உருவெடுத்து நின்று விட்டான் போல... அவனுக்காக தன்னுடனே வாதிட்டுக் கொண்டிருந்தாள் மங்கை.

'அவர் சாதரணமா தானே உன்னை கூப்பிட்டார் கூப்பிட்டதும் போறதுக்கு என்ன... அவரை கோபப்படுத்தி அதனால அவர் உன்னை காருக்குள்ள உட்கார வைக்க போய் தானே இத்தனையும்.. அவரும் வேணும்னு எதுவும் செய்யலையே அவன் பக்க நியாயத்தை மனசாட்சி ஒரு பக்கம் இடித்துரைக்க,

மூளை அவனுக்கு எதிர்மறையாகக் கூட சிந்திக்காமல் ஆமாம் சாமி போட்டதில் அவனை நினைத்து கண்கள் லேசாய் கலங்க ஆரம்பித்திருந்தது...

காலையில் எழுந்ததில் இருந்தே ரேவதியின் நடவடிக்கைகளை கண்டும் காணாதது போல கவனித்துக் கொண்டே வேலைகளை தொடர்ந்திருந்தார் காஞ்சனா.

நேற்றும் சாப்பிட மறுத்து ஒரு டம்பளர் பாலோடு உணவை முடித்து கொண்டு விட்டாள்.

இன்று அது கூட இல்லை... வாடிய முகமாய் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தாள் ரேவதி,

இதற்கு மேலும் அவளை எப்படி நெருங்குவது என புரியாமல்,

பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் மகனை அழைத்தார் காஞ்சனா.

"என்னம்மா?"

கிளம்பிக் கொண்டிருந்தவன் அன்னையின் பக்கம் வந்து நின்றான்.

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Where stories live. Discover now