🌊அலை 3🌊

753 12 2
                                    

எங்கும் இருள் சூழ்ந்திருக்க நேரம் இரவு மணி பதினோன்றை கடந்து இருந்தது… திவ்யாவை அவர்களது வீட்டில் விட்டுவிட்டு அவளது ஸ்கூட்டியையும்‌ ஒப்படைத்து அடுத்த தெருவில் இருக்கும் தன் வீட்டை நோக்கி நடையை கட்டியிருந்தாள் ரேவதி.

தெருவோர மின்கம்பத்தில் எரிந்த சோடியம் விளக்குகளின் ஒளியில் மகளின் வருகையை எதிர்ப்பார்த்து வாசலிலேயே  காத்திருந்தார் ரேவதியின் அன்னை காஞ்சனா…

காஞ்சனா மனோகரன் தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் முத்தவள் ரேவதி இளையவன் சிவா. காஞ்சனாவின்  கணவர் மனோகர் இரண்டு வருடத்திற்கு முன் கார் விபத்தில் இறைவனடி சேர்ந்து விட குடும்ப பொறுப்புக்கள் அனைத்தும்  ரேவதியின் தலையில் விழுந்தது. 

கல்லூரி செல்ல வேண்டியவள்  படிப்பை பாதியில் நிறுத்திக்கொண்டு ஆவணங்கள் அச்சிடும் ஆபீசில் வேலை செய்து வருகிறாள். அவளுக்கு நடனம் என்றால் கொள்ளை பிரியம்… 

தந்தை இருந்த வரை எதிலும் பங்கு கொண்டது இல்லை பள்ளி விழாக்களில் பெயர் கொடுத்தாலும் "நீ எல்லார் முன்னாடியும் ஆடுவது அப்பாவுக்கு பிடிக்கல ரேவதிமா" என்று தந்தையிடமிருந்து  மறுப்பு வந்ததும் அதை கைவிட்டவள்,  குடும்ப சூழ்நிலையின் காரணமாக திவ்யா பங்குபெரும் இது போன்ற திருமணங்களிலும் பிறந்த நாள் விழாக்களிலும் அவளின் சிபாரிசின் பேரில்  தானும் ஆடுவதையும் தொடர்ந்து வருகிறாள்.

ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில் விளக்கொளியில் அமர்ந்திருந்த காஞ்சனா மகளை கண்டதும் "என்ன ரேவதி இவ்வளவு நேரம்? மண்டபம் ரொம்ப தூரமோ?" என்றாள் மகளின் தோள்பையை வாங்கியவாறே…

"ஆமாம்மா கொஞ்சம் தூரம் தான்… அதான் வந்துட்டு இருக்கேன்னு போன் பண்ணி சொல்லிட்டேனே...  அதுக்கு  அப்புறமும் நீ ஏம்மா பனியில வெளியே உட்கார்ந்து இருக்க?" என்று அக்கறையுடன் தாயை கடிந்தாள்.

"ஊரு உலகம் கெட்டு கெடக்கு ரேவதி... அப்படியெல்லாம் உன்னை விட்டுட்டு என்னால வீட்டுக்குள்ள இருக்க முடியாது... அதுவும் நீ வர்ற நேரத்தை பார்த்தியா?" என்று  வாக்குவதாத்தை துவங்கினாள் காஞ்சனா. பின் நாற்பதுகளில் இருப்பவர்

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Where stories live. Discover now