கல்யாணி ரேவதியை தன் மருமகளாக ஏற்றுக் கொண்டதில், எல்லையில்லா மகிழ்ச்சியில், திளைத்திருந்தான் கார்த்திக்.
அன்னை தன்னிடம் நேரிடையாக சொல்லவில்லை என்றாலும் கூட, நிறைந்த சபையினில் ரேவதியை மருமகள் என சொல்லியதில், வானமே வசப்பட்டது போல ஒரு மாயை…
அந்த மாயையில் இருந்து விடபட சற்றும் அவன் மனம் விரும்ப வில்லை… இப்போதே இந்த கணமே தன் மனையாளை காண வேண்டும் என உந்துதல் பிறக்க, தந்தையிடம் சொல்லிக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியவனின் கவனத்தை, தன் புறம் திருப்பியது, தீபக்கிடமிருந்து வந்த அலைபேசியின் அழைப்பு.
“சொல்லு மச்சி…” உற்சாகமாக வந்த நண்பனின் குரலில் திகைத்தவன், பின் தெளிந்து “என்ன மாப்ள…? ரொம்ப ஹெப்பியா இருக்க போல இருக்கு… !! “ நண்பனின் உற்சாகம் தன்னையும் தொற்றிக் கொண்டதில், சிரித்தபடியே கேட்டிருந்தான் தீபக்.
“ஆமா தீபக்… ரொம்ப ஹேப்பியான நீயூஸ் தான்… என்னவா இருக்கும்… நீயே கெஸ் பண்ணி சொல்லு பாக்கலாம்….” ஸ்டியரிங்கில் தாளமிட்டபடியே நண்பனிடம் புதிர் போட்டான் கார்த்திக்.
வெகு நாளைக்கு பிறகு கார்த்திக்கின் இந்த புது அவதாரத்தில் மகிழ்ந்தவன், “இந்த அளவுக்கு நல்ல மூடுல இருக்கன்னா அது ரேவதி சம்மந்தப்பட்ட விஷயமா தான் இருக்கனும்…. கரெக்டா…?” தோழனின் மனம் அறிந்து தீபக் பதிலை சொன்னான்.
தீபக்கின் பதிலில் நேரம் காலம் தெரியாமல், மனையாளின் மதி முகம் மனக்கண்ணில் வலம் வர,
நீர் பொய்த்து போன பாலைவனத்தில் நில்லாமல் கொட்டிய மழை நீரை போல, தன் வாழ்க்கையின் உயிருற்றாய் வந்தவளது, செவ்விதழ்கள் இரண்டும் தன் இதழுடன் உரசிக்கொண்ட தேவ நிமிடங்கள் நினைவில் வந்ததில், தேகம் சிலிர்த்து, உதட்டில் உறைந்த கள்ள புன்னகையில், முகம் விகாசித்தது…
“டேய் கார்த்திக் லைன்ல நான் இருக்கியா….?”
மனைவியின் நினைவில் நண்பனை மறந்து கனவு கண்டு கொண்டிருந்தான் கார்த்திக்.
YOU ARE READING
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romanceஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்