அலை 43

596 20 10
                                    

“மனம் ஒரு குரங்கு” என்று பெரியவர்கள் சும்மாவா  சொல்லி வைத்தார்கள், மரத்திற்கு மரம் தாவும் குரங்கை போல,  ரேவதியின் மனமும் ஒரு நிலையில் இல்லாமல் இதற்கும் அதற்கும்  தவித்துக்  கொண்டிருந்தது.  

முதலில் சரி என்று நினைத்தது  எல்லாம், இப்போது தவறோ என்று  மனதில் தோன்றி அவளை அலைகழித்தது… 

ரேவதி,  மருத்துவமனையில் இருந்து  வந்து இரண்டு தினங்களாகிறது.. முதல் நாள்  தந்தையை பார்த்து விட்டு வருகிறேன் என சொல்லிக் கொண்டு போனவன் தான், அதன் பிறகு அவளை எட்டி கூட, பார்க்கவில்லை… ஆரம்பத்தில் அதை நல்லது என நினைத்தவளுக்கு போக போக  அவனின் நினைவு பெண்ணவளை அதிகமாய் வாட்டி வதைத்தது… 

கார்த்திக்கை விட்டு விலக நினைத்தவள் தான்,  ஆனால்,  இப்போது அவளை தவிர்ப்பதில், விட்டது தொல்லை என்று அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை… காரணமே இல்லாமல்  அழுகையாய் ,  கோபமாய், வெறுப்பாய்  அவளது இயலாமை அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

அன்று காலை அத்தனை அன்பாய்‌ அக்கரையாய் தன்னிடம் பேசியவன், அதன் பிறகு ஏன் வரவில்லை என்று இப்போது வரையிலும் மண்டையை உடைத்து யோசித்துக் கொண்டு தான் இருக்கிறாள், ஆனால் விடைதான், கிடத்தபாடில்லை…  அவளுக்கு தெரியவில்லை தன் பேச்சால் தான் மனமுடைந்து சென்றுவிட்டான் என்று,

தன்னை சார்ந்தவர்கள் எல்லோரையும் தவிர்க்கிறான் என நினைத்திருக்க, சிவாவின் வாய்மொழியாகவே, கார்த்திக், அவளை மட்டும் தான் காண வரவில்லை, மற்றபடி சிவாவிடமும் காஞ்சனாவிடமும், தினமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறான் என தெரிந்துக் கொண்டதும், ஆடவனின் செய்கை பெண்ணவளின் தவிப்பையும் கோபத்தையும் ஒருசேர அதிகப்படுத்தி இருந்தது  …

அவனை எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருந்தவளின் கண்ணீர் துளிகள் வைரக்கற்களாய் மின்னி  காட்சிகளை மறைத்துக் கொண்டிருந்தது‌… 

தொலைக்காட்சியில் பார்வை இருந்தாலும்  கவனம் அதில் இல்லை…

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Where stories live. Discover now