5 போராளி

871 45 3
                                    

5 போராளி

ஆழ்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். செய்வதறியாத திகைப்புடன் இனியவனின் குடும்பம் வெளியே காத்திருந்தது. பெண்கள் ஓயாமல் கண்ணீர் சிந்தியபடி இருந்தார்கள். ஆழ்வியின் நிலையை அவர்களால் சகிக்க முடியவில்லை. அவளது மேலுடலில் இருந்த சிவந்த திட்டுக்கள், அவள் கடந்து வந்த கொடுமையை பறைசாற்றியது. கையாலாகாமல் தவித்தாள் பார்கவி. நடந்ததிற்கு அவர்கள் பொறுப்பில்லை என்றாலும், அந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் தவித்தார்கள் அவர்கள். ஆழ்வியின் குடும்பத்தார்கு பதில் கூற வேண்டும் அல்லவா?

"பார்கவி, ஆழ்வியோட அம்மாவுக்கு ஃபோன் பண்ணி, விஷயத்தை அவங்ககிட்ட சொல்லு" என்றார் பாட்டி கண்களை துடைத்தபடி.

மாட்டேன் என்பது போல் திகிலுடன் தலையசைத்தாள் பார்கவி.

"நம்ம அதை செஞ்சு தான் ஆகணும், பார்கவி. நமக்கு வேற வழியில்ல."

"படிக்கிறதுக்கு புக்கு வேணும்னு கேட்டு தான் அவ நம்ம வீட்டுக்கு வந்தா. அவ ரொம்ப நல்ல பொண்ணு, பாட்டி. என்னால தான் அவ இந்த நிலைமையில இருக்கா. நான் அந்த புக்கை மறந்துட்டு போயிருக்கக் கூடாது. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணி, அவ வாழ்க்கையை கெடுத்துட்டேன்" என்று தன் கன்னத்தில் தானே அறைந்து கொண்டாள்.

"பார்கவி, கண்ட்ரோல் யுவர் செல்ஃப்" என்றாள் நித்திலா, அவள் கையைப் பிடித்தவாறு.

"அக்கா, அண்ணன் என்னை தான் தொட வந்தாரு. என்னை காப்பாத்த வந்து, அவ இதுல மாட்டிக்கிட்டா. ஆனா என்னால அவளை காப்பாத்த முடியாம போயிடுச்சு. நான் எப்படிக்கா அவ முகத்துல முழிப்பேன்? அவளோட இந்த நிலைமைக்கு நான் தான் கா  காரணம்?"

"இதுக்குத்தான், என்ன செய்யணும்னு நான் உங்ககிட்ட சொன்னேன். நான் சொன்ன பேச்சை நீங்க கேட்டிருந்தா, இப்படி ஒரு மோசமான சூழ்நிலைக்கு நம்ம தள்ளப்பட்டிருக்க மாட்டோம்.  பொம்பளைங்க மேல அவருக்கு இருக்கிற ஈர்ப்பு நம்மளால சமாளிக்க முடியாத ஒன்னுன்னு நான் ஏற்கனவே சொன்னேன்..." என்றான் சித்திரவேல் சலிப்புடன்.

நீயின்றி அமையாது (என்) உலகு...!Where stories live. Discover now