12 விற்பனை முடிந்தது

523 46 4
                                    

12 விற்பனை முடிந்தது

இன்பவனம்

"நான் நாளைக்கு ஆழ்வி வீட்டுக்கு பூ முடிக்க போறேன்" என்றாள் நித்திலா மதிய உணவு சாப்பிட்டபடி.

அனைவரும் அவளை பார்க்க,

"நீங்க எல்லாரும் நம்ம இன்னுவோட நலத்தில் அக்கறை இருக்கிறவங்கன்னு நான் நம்புறேன். அது உண்மையா இருந்தா, நீங்களும் என் கூட வாங்க"

"நீ எங்களைப் பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க, நித்தி? இன்னு குணமாகணும்னு நாங்க யாரும் நினைக்கலையா?" என்றார் பாட்டி.

நித்திலா எதுவும் கூறுவதற்கு முன்,

"எனக்கு இந்த கல்யாணம் ஆழ்வியோட நடக்கிறதுல விருப்பமில்ல" என்றாள் பார்கவி.

"அவங்க ஒத்துக்கிட்டாங்க"

"அவளை கட்டாயப்படுத்தி ஒத்துக்க வச்சிருப்பாங்க"

"அது நம்ம இன்னுவோட அதிர்ஷ்டம்... அப்படித்தான் நான் நம்புறேன்"

"எது உன்னை அப்படி நம்ப வச்சதுன்னு எனக்கு புரியல" என்றான் சித்திரவேல்.

"உங்களுக்கு ஞாபகம் இருக்கா, பாட்டி, ஒரு தடவை நம்ம இன்னுவோட ஜாதகத்தை ஜோசியர் கிட்ட காட்டினோம்"

தலையசைத்தார் பாட்டி.

"அவனோட ஜாதகப்படி, அவனுக்கு இருபத்தி எட்டு வயசுல கல்யாணம் ஆகும்"

பாட்டி ஆம் என்று தலையசைத்தார்.

"இருபத்தி எட்டு வயசுல அவனுக்கு கல்யாணம் ஆகலைன்னா, அவனுக்கு எப்பவுமே கல்யாணம் நடக்காதுன்னு சொன்னார். இந்த மாசத்தோட அவனுக்கு இருபத்தி எட்டு வயசு முடியுது"

ஆம் என்று தலையசைத்த பாட்டி,

"அதுமட்டுமில்ல அவனுடைய கல்யாணம், வழக்கமா நடக்கிற மாதிரி நடக்காதுன்னு சொன்னாரு. அதுக்கான அர்த்தம் எனக்கு அப்ப புரியல" என்றார்.

"நான் அவரைக் கேட்ட போது, அவர் எனக்கு எந்த பதிலும் சொல்லல. இப்ப தான் எனக்கு புரியுது. நம்ம இன்னுவோட மோசமான எதிர்காலத்தை அவர் கணிச்சிருக்கணும். அதுக்காகத்தான் நமக்கு ஒரு ஹின்ட் குடுத்தாரு  போலிருக்கு"

நீயின்றி அமையாது (என்) உலகு...!Where stories live. Discover now