51 இனியவனின் வருத்தம்

818 54 12
                                    

51 இனியவனின் வருத்தம்

இனியவன் கூறியதோடு மட்டுமல்லாமல், அவனது எல்லா சந்தேகங்களையும் தீர்க்கக்கூடிய  மேலும் சில கேள்விகளை தன் மனதிற்குள் தயார் செய்துக்கொண்டு ஆழ்விக்கு ஃபோன் செய்தார் தமிழரசி. இருட்டில் தவித்துக் கொண்டிருக்கும் இனியவனுக்கு வெளிச்சத்தை காட்ட வேண்டும் என்பது அவரது எண்ணம். அவர் ஒரு வழக்கறிஞர் ஆயிற்றே...! கேள்வி கேட்க அவருக்கு ஒருவர் சொல்லியா கொடுக்க வேண்டும்?

அவரது அழைப்பை ஏற்றாள் ஆவி.

"எப்படி இருக்கீங்க ஆன்ட்டி?" இப்ப தான் என் ஞாபகம் உங்களுக்கு வந்துதா? நான் உங்களுக்கு ஃபோன் பண்ணப்போ நீங்க ஏன் என்னோட காலை அட்டென்ட் பண்ணல? " என்றாள் அவள் உரிமையோடு.

"நான் என் கேசில் கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன்டா கண்ணா. அதனால தான் உனக்கு மறுபடி என்னால ஃபோன் பண்ண முடியல. ரொம்ப சாரி" என்று மன்னிப்பு கூறினார் தமிழரசி.

"பரவாயில்லை விடுங்க ஆன்ட்டி"

"நீ எப்படி இருக்க? உன் வீட்டுக்காரர் எப்படி இருக்காரு?" என்றார் தமிழரசி, தான் பேசுவதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த ஆழ்வியின் வீட்டுக்காரனை பார்த்தபடி.

"நான் நல்லா இருக்கேன்... இனியவரும் நல்லா இருக்கார்!"

முதன்முறையாக தன்னை அவளது வீட்டுக்காரன் என்று ஒப்புக்கொண்டதை கேட்ட இனியவனின் முகத்தில் புன்னகை துளிர்த்தது.

"நல்லா இருக்காருன்னா? அவர் குணமாயிட்டாரா?"

"கம்ப்ளிட்டா குணமாயிட்டாரு, ஆன்ட்டி"

"நெஜமாவா சொல்ற? ஒரு நாள் நீயும் அவரும் என் வீட்டுக்கு வாங்க"

"ம்ம்ம்..."

"ஏன் உன் குரல் இப்படி உள்ள போகுது?"

"எங்க கல்யாணத்தைப் பத்தி இனியவருக்கு எதுவுமே தெரியாது. அவர்... அவர் என்னை மறந்துட்டார், ஆன்ட்டி"

"என்ன்னனது?" தன் குரலில் அதிர்ச்சி காட்டினார் தமிழரசி, அவர் அவளுக்கு தற்செயலாக தான் ஃபோன் செய்தார் என்று ஆழ்வியை நம்ப வைக்க.

நீயின்றி அமையாது (என்) உலகு...!Onde histórias criam vida. Descubra agora