55 நீ தான் வேண்டும்

747 50 9
                                    

55 நீ தான் வேண்டும்

இனியவன் கூறியதை கேட்டு, ஆழ்வியின் கரங்கள் தன் சேலையை முறுக்குவதை நிறுத்தின.

"ஆழ்வி, இதுல தயங்க எதுவுமே இல்ல. சித்திரவேல் நம்ம நினைச்சதை விட ரொம்ப ஆபத்தான ஆளா இருக்கான். நம்ம நமக்குள்ள தெளிவா இருக்கணும். அப்பதான் நம்மளால அவனை ஹேண்டில் பண்ண முடியும். அவனோட மோசமான நடவடிக்கைக்கு காரணம் என்னன்னு நீங்க கெஸ் பண்ணி இருந்தா தயவு செஞ்சு சொல்லுங்க" என்றான் குருபரன்.

ஆழ்வி இனியவனை பார்க்க, அவன், கூறு என்பது போல் சைகை செய்தான்.

"நீங்க சொல்றது சரி தான். ஒருவேளை நீங்க உங்க வைஃப் கூட சேர்ந்துட்டா, நீங்க உங்க வைஃபோட உங்க வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிடுவீங்க. சித்திரவேல் அண்ணனுக்கும் அக்காவோட நிறைய நேரம் கிடைக்கும். ஆனா உங்க மனசுல இருக்குற அக்காவோட இமேஜ் அப்படியே தான் இருக்கும். இந்த கல்யாணத்தை நீங்க காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டா, உங்க வைஃபோட சந்தோஷமா வாழ ஆரம்பிச்சிடுவீங்க. அவர் அது நடக்கக்கூடாதுன்னு நினைக்கிறாரு. உங்களுக்கும் அக்காவுக்கும் நடுவுல ஒரு பிளவு ஏற்படணும், நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் வெறுக்கணும் அப்படிங்கிறது தான் அவருடைய எண்ணம்.  அப்போ தான் அக்கா தன்னுடைய முழுமையான நிம்மதியை தேடி அண்ணன் கிட்ட போவாங்க. நீங்க ஒரு பணக்கார வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னு விருப்பப்பட்டா, அது அக்காவை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும். உங்களுக்கு லோகிளாஸ் பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சதுக்காக அக்கா மேல உங்களுக்கு கோபம் வரும். அது அக்காவுக்கு உங்க மேல வருத்தத்தை ஏற்படுத்தும். அது தான் நடக்கணும்னு சித்திரவேல் அண்ணன் நினைக்கிறாரு"

"இது மேல மேல சிக்கல் ஆகிகிட்டே போகுது" என்ற குருபரன்,

"நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும், இனியா"  என்றான்.

கண்களை மூடி ஆழமாய் யோசித்தான் இனியவன். அவனை தொந்தரவு செய்யாமல்  ஆழ்வியும் குருபரனும் அமைதியாய் இருந்தார்கள். அவன் நித்திலாவை குறித்து கலக்கமடைந்திருக்கிறான் என்று அவர்களுக்கு தெரியும். ஏன் இருக்காது? அவள் அவனது அக்காவாயிற்றே. அவன் சித்திரவேலை தண்டித்தால் அது நிச்சயம் நித்திலாவை புண்படுத்தும். அவனை தண்டிக்கவில்லை என்றால், அவன் அனைத்தையும் சீரழித்து விடுவான். இது வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தால், முடிவெடுக்க இனியவனுக்கு வெகு சில நிமிடங்கள் தான் தேவைப்பட்டிருக்கும். ஆனால் இது குடும்பம். இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையை அவன் எதிர்கொண்டதே இல்லை. இது இரு முனையும் கூர்மையுள்ள கத்தி.
அவன் எச்சரிக்கையாய் இல்லாவிட்டால் அந்த கத்தி அவனை மட்டும் அல்லாமல் அவனை சேர்ந்தவர்களையும் காயப்படுத்தும்.

நீயின்றி அமையாது (என்) உலகு...!Donde viven las historias. Descúbrelo ahora