57 நடுக்கத்தில் சித்திரவேல்
நித்திலா, சித்திரவேல், ஆழ்வி மூவரும் வெவ்வேறு வித குழப்பத்தில் ஆழ்ந்தார்கள்.
"நான் செய்யாத தப்புக்காக எதுக்காக என்னை குற்றம் சொல்ற?" என்றாள் நித்திலா.
"இதுல உங்க தப்பு எதுவும் இல்லயா?" என்று சிரித்த இனியவன்,
"நீங்க என்ன செய்றீங்கன்னு கூட உணராம, நீங்க இவ்வளவு அப்பாவியா இருக்கிறதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு கா" என்றான்.
"நான் என்ன செஞ்சேன், இன்னு?"
"நீங்க என் மேலயும், நம்ம குடும்பத்து மேலயும் அக்கறை காட்டுறீங்க. ஆனா உங்க புருஷனை கவனிக்கணும்னு உங்களுக்கு தோணல. அதுக்கு என்ன அர்த்தம்? உங்களுடைய தனி கவனிப்பு அவருக்கு தேவையில்லன்னு நினைக்கிறீங்களா?"
"அவர் என்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்க மாட்டார், இன்னு. உனக்கு அவரைப் பத்தி தெரியாது"
"உங்களுக்கு அவரைப் பத்தி தெரியுமா?" என்றான் விஷம புன்னகையுடன்.
"என்னைவிட அவரைப் பத்தி வேற யாருக்கு தெரியும்? எங்களுக்குள்ள இருக்கிற அண்டர்ஸ்டாண்டிங் பத்தி உனக்கு தெரியாது" என்றாள் நித்திலா நம்பிக்கையுடன்.
"தப்பான எண்ணத்தோட இருக்காதீங்க கா. எல்லா ஆம்பளையுமே தன்னோட மனைவி தன் மேல தனி அக்கறை காட்டணும்னு தான் விரும்புவான். ஒருவேளை, நீங்க அவர் மேல அக்கறை காட்டலன்னா, அவர் எங்களுக்கு எதிரா திரும்புவாரு. ஜாக்கிரதையா இருங்க" என்றான் சாதாரணமாய்.
சித்திரவேலின் விழி அதிர்ச்சியோடு விரிந்தது.
"நீ சொல்றதுக்கு என்ன அர்த்தம், இன்னு?"
"ஆமாம் கா, நீங்க என் மேல காட்டுற அக்கறையும், அவர் மேல காட்டுற அலட்சியமும் அவரை என்னை வெறுக்க வைக்கும். அது எனக்கு எதிரா அவரை திருப்பும்" என்றான் புன்னகையோடு.
மென்று விழுங்கினான் சித்திரவேல். அவனது பதற்றம் எல்லை கடந்து கொண்டிருந்தது. திடீரென்று எதற்காக இனியவன் இதைப் பற்றி எல்லாம் பேசுகிறான்? அவனுக்கு ஏதாவது தெரிந்திருக்குமோ? அல்லது அவனது திட்டம் குறித்து அவனுக்கு பொறி தட்டி இருக்குமோ? முகத்தில் துளித்த வேர்வையை துடைத்துக் கொண்டான் சித்திரவேல்.
![](https://img.wattpad.com/cover/369867737-288-k860768.jpg)
VOUS LISEZ
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️)
Roman d'amourஇளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத...