4 பிடிக்குள்...

716 42 6
                                    

4 பிடிக்குள்...

திகில் அடைந்த பார்கவி பின்னோக்கி நகரத் துவங்கினாள். அங்கே ஓடி வந்த முத்து, இனியவனை பிடிக்க முயன்றான். அவனை ஒரே தள்ளில், பத்தடி தள்ளி விழச் செய்தான், கட்டுப்படுத்த முடியாத பலத்தோடு இருந்த இனியவன். ஒரு நொடியும் தாமதமின்றி பார்கவியை துரத்த தொடங்கினான். கண்ணீர் சிந்திய படி ஓடினாள், எந்த ஒரு தங்கையும் எதிர்கொள்ள கூடாத மோசமான சூழ்நிலையில் இருந்த பார்கவி. அவள் தன் கூடப்பிறந்த அண்ணனால் துரத்தப்பட்டுக் கொண்டிருந்தாள். அவன் கையில் அகப்பட்டால், அவன் என்ன செய்வான் என்று அவளுக்கு தெரியும்.

காடு போன்ற தலைமுடியுடனும், புதர் போன்ற தாடியுடனும் கூடிய காட்டுமிராண்டி போல் தோற்றமளித்த ஒருவன் பார்கவியை துரத்துவதை பார்த்து குழம்பி நின்றாள் ஆழ்வி. அவளை துரத்துவது யார் என்ற முடிவுக்கு அவளால் வர முடியவில்லை. ஏனென்றால், அது பார்கவியின் வீடு. அவளது வீட்டிலேயே அவளை யார் துரத்துவது? ஆனால் அழுதபடி இருந்த பார்கவியின் முகம், அவள் இருப்பது ஒரு மோசமான சூழ்நிலை என்பதை அவளுக்கு விளக்கி கூறியது. 

"கவி, யாரது? எதுக்காக அவன் உன்னை துரத்துறான்?" என்றாள்.

"அவர் என்னோட அண்ணன்... மனநிலை சரியில்லாதவர். பொம்பளைங்க மேல அவருக்கு ஈர்ப்பு. இப்போ அவர் என்னை தொட முயற்சி பண்றாரு. தயவு செய்து இங்கிருந்து போயிடு, ஆழ்வி" என்றபடி ஓடினாள்.

அதிர்ச்சியில் உறைந்தாள் ஆழ்வி. பார்கவின் அண்ணன் மனநிலை சரியில்லாதவரா? கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு விஷயத்திற்காகவா அவர் இப்பொழுது அவளை துரத்திக் கொண்டிருக்கிறார்? திகில் அடைந்தாள் ஆழ்வி. எதைப் பற்றியும் யோசிக்காமல் அங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்று தான் அவள் நினைத்தாள். ஆனால் அதே நேரம், பார்கவியின் மீது பாய்ந்த இனியவன், அவளது பாவாடையை பற்றினான்.

"அண்ணா ப்ளீஸ், என்னை விடுண்ணா நான் உன் தங்கச்சிணா..." என்றாள் அவன் பிடியில் இருந்து தனது பாவாடையை விடுவிக்க போராடியபடி.

நீயின்றி அமையாது (என்) உலகு...!Donde viven las historias. Descúbrelo ahora