53 சுவரில் அடித்த பந்து
இதற்கிடையில்...
நித்திலாவும் பாட்டியும் ஜோசியரின் வீட்டிற்கு சென்றார்கள். சோழிகளை சுழட்டி போட்டு நடந்த விஷயத்திற்கான பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை கணித்தார் ஜோசியர். விழுந்த சோழிகளின் எண்ணிக்கையை வைத்து எதையோ கணக்கிட்டார். நித்திலாவும் பாட்டியும் அவரை பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"பிரச்சனை ரொம்ப சிக்கலா தான் மா தெரியுது. நீங்க ரொம்ப பெரிய சூறாவளியை எதிர்கொள்ள போறீங்க" என்றார் ஜோசியர்.
"நீங்க என்ன சொல்றீங்க?" என்று நடுக்கத்தோடு கேட்டார் பாட்டி.
"ஆமாமா அவங்களுக்கு எதிர்பாராத பெரிய அடி விழப்போகுது. அவங்க வாழ்க்கையையே மாத்தி போட போகுது. அதை எதிர் கொள்ள அவங்க தயாராக இருக்கணும்"
"நீங்க சொல்றதுக்கு என்ன அர்த்தம் ஜோசியரே?" என்றாள் நித்திலா பயத்துடன்.
"ஆமாம், உங்களால உங்க பிறந்த வீடு ரொம்ப பெரிய பிரச்சனையை எதிர்கொள்ளப் போகுது. அது அவ்வளவு சாதாரண பிரச்சனை இல்ல. எரிமலை மாதிரி வெடிச்சி சிதறப்போகுது"
நித்திலாவும் பாட்டியும் நடுக்கத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"இதையெல்லாம் தவிர்க்க எதுவும் பரிகாரம் இல்லையா?"
"ஏற்கனவே ரொம்ப காலதாமதம் ஆயிடுச்சு. இது பரிகாரத்தை பத்தி எல்லாம் யோசிக்கிற நேரம் இல்ல. நீங்க விளைவுகளை எதிர் கொண்டு தான் ஆகணும். பிரச்சனையோட தீவிரத்தை குறைக்க, அஞ்சு எண்ணெய் கலந்த தீபத்தை ஒவ்வொரு நாள் காலையிலையும் பூஜை ரூம்ல ஏத்தி வையுங்க. அந்த விளக்கை ஏத்தினதுக்கு பிறகு தான் நீங்க எதுவும் சாப்பிடலாம்"
"நான் அதை நிச்சயம் செய்றேன் ஜோசியரே"
அவர் சரி என்று தலையசைக்க இருவரும் எழுந்து நின்றார்கள்.
"ஒரு நிமிஷம், மா"
அவரை திரும்பிப் பார்த்தாள் நித்திலா.
ESTÁS LEYENDO
நீயின்றி அமையாது (என்) உலகு...!
Romanceஇளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத...