25 இனியவன் இனியவனாய்...

881 54 14
                                    

25 இனியவன் இனியவனாய்...

காலை சிற்றுண்டியை இன்பவனதில் உண்டான் குருபரன்.

"நம்ம ஞாயிற்றுக்கிழமை வெளிய போறோம். ரெடியா இருங்க" என்றான் குருபரன்.

"நம்ம எங்க போக போறோம்?" என்றாள் ஆழ்வி.

குருபரன் அது பற்றி யோசித்தான்.

"அவரை யாருன்னே தெரியாதவங்க இருக்கிற ஒரு இடத்துக்கு தான் நம்ம அவரை கூட்டிக்கிட்டு போகணும்" என்றாள் ஆழ்வி.

"அப்படின்னா மாமல்லபுரம் கூட்டிகிட்டு போகலாமா?"

"இது நல்ல ஐடியா"

"ஆமாம், அது சென்னைக்கு பக்கத்துல இருந்தாலும், சென்னையை சேர்ந்தவங்க யாரும் அங்க அதிகமா வர்றதில்லை"

ஆம் என்று தலையசைத்தாள் நித்திலா.

"ஞாயிற்றுக்கிழமை காலைல நான் வந்து உங்களை பிக்கப் பண்ணிக்கிறேன். ரெடியா இருங்க"

"சரி" என்ற ஆழ்வி, சமையலறைக்கு போக எத்தனித்த போது, அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தான் இனியவன்.

"என்னங்க... நில்லுங்க..." என்றபடி அவர்களுக்கு பின்னால் சிரித்தபடி ஓடினான் குருபரன்.

இனியவனாவது, நிற்பதாவது...! அவர்களைப் பின்தொடர்ந்து, அவர்கள் அறைக்குச் சென்றான் குருபரன்.

"அவர் யார் சொல்ற பேச்சையும் கேட்கிறதே இல்ல" என்றாள் ஆழ்வி கவலையோடு.

"அதுவும் நல்லது தான், ஆழ்வி"

"ஏன் அப்படி சொல்றீங்க?"

"ஆமாம், அவன் உங்களைத் தவிர வேற யார் பேச்சையும் கேட்காம இருக்கிறது நல்லது தான். இனியா இப்போ தன்னிச்சையா எதையும் யோசிக்கிற நிலைமையில இல்ல. அவனுக்கு எது சரி, தப்புன்னு தெரியாது. ஒருவேளை சித்திரவேலோ, டாக்டரோ அதை அவங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்க நினைச்சா என்ன ஆகும்?"

"நீங்க சொல்றது எனக்கு புரியல"

"அவன் கையில அவங்க ஒரு கத்தியை கொடுத்து, குத்திக்க சொன்னா என்ன ஆகும்?"

நீயின்றி அமையாது (என்) உலகு...!Where stories live. Discover now