56 கணிக்க முடியாத...
பழச்சாறுடன் இனியவனின் அறைக்கு வந்த ஆழ்வி, அதை அவனிடம் நீட்டினாள். அதை அவளிடம் இருந்து பெற்றுக் கொள்ளாமல் நின்றான் இனியவன்.
"ஆழ்வி, எனக்கு ஒரு விஷயத்துல தெளிவு வேணும்"
"எந்த விஷயத்துல?"
"நம்ம ரெண்டு பேரும் மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறியா?"
முகம் சுளித்தபடி இல்லை என்று தலையசைத்தாள்.
"நல்லதா போச்சு. அப்படின்னா நம்ம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி அப்படிங்கறதுல உனக்கு எந்த சந்தேகமும் இல்லயே?"
"நான் ஏன் சந்தேகப்படணும்?"
"நமக்கு கல்யாணம் ஆகும்போது நான் சுயநினைவுல இல்ல. அதனால என் சுயநினைவோட மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நீ விரும்புவியோன்னு நெனச்சேன்"
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல"
"ஏன் அப்படி?"
"அது அவசியம்னு நான் நினைக்கல"
"நெஜமாத் தான் சொல்றியா?"
"ஆமாம். உங்களுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுதா?"
"நிச்சயமா இல்ல. உண்மையை சொல்லப்போனா, எனக்கு இந்த சடங்கு சம்பிரதாயத்தில் எல்லாம் நம்பிக்கையே இல்ல. நல்ல காலம், என் கல்யாணம் எனக்கே தெரியாம நடந்துடுச்சு" என்று சிரித்தான்.
"ஆனா நமக்கு கல்யாணம் நடந்தது உங்களுக்கு தெரியாதே..."
"யார் சொன்னது? நான் வேட்டி சட்டைல, எல்கேஜி பிள்ளை மாதிரி அழுத்தமா தலையை வாரிக்கிட்டு, அரை மயக்கத்தில் இருந்தேன். சரியா?"
"இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? என் அண்ணன் சொன்னானா?" என்றாள் ஆச்சரியமாய்.
"இல்ல, நம்ம கல்யாண ஃபோட்டோவுல பார்த்தேன்"
"கல்யாண ஃபோட்டோவா? ஆனா நம்ம கல்யாணத்துல தான் யாருமே ஃபோட்டோ எடுக்கலையே..."
தனது கைபேசியை எடுத்து தமிழரசி அவனுக்கு அனுப்பிய புகைப்படத்தை அவளிடம் காட்டினான். அதை கண்ட ஆழ்வி ஆர்வம் மேலோங்கிய வியப்படைந்தாள். அவனிடமிருந்து அவனது கைபேசியை பெற்று அந்த புகைப்படத்தை ரசித்து பார்த்தாள்.
KAMU SEDANG MEMBACA
நீயின்றி அமையாது (என்) உலகு...!
Romansaஇளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத...