20 முன் நிற்கும் சவால்

675 49 5
                                    

20 முன் நிற்கும் சவால்

"ஐ அம் சாரி" என்றான் அவள் கையில் இருந்த தழும்பை பார்த்து, அதை எதற்காக கூறுகிறார்கள் என்ற அர்த்தம் அவனுக்கு தெரியாத போதும். ஆழ்வி கூறியதை அவன் திரும்ப கூறினான். அவ்வளவே.

அவனை ரசித்தபடி புன்னகை புரிந்தாள் ஆழ்வி. அவள் எப்போதும் இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியோடு காணப்பட்டாள். இனியவனிடம் இவ்வளவு விரைவான முன்னேற்றம் ஏற்படும் என்பதை அவள் எதிர்பார்த்து இருக்கவேயில்லை. இந்த சிகிச்சை முறை பற்றி மீனா அவளிடம் கூறிய போது, அவள் ஓரளவுக்கு நம்பிக்கையோடு தான் அதை துவங்கினாள். ஆனால் அதன் முன்னேற்றம் ஆமை வேகத்தில் இருக்கும் என்று தான் அவள் எதிர்பார்த்தாள். இந்த வேகத்தில் அவன் முன்னேற்றம் அடைவான் என்றால், இரண்டு அல்லது மூன்று மாதத்தில் அவன் முழுவதுமாய் பழைய நிலைக்கு திரும்பி விடுவான் என்பது நிச்சயம்.

அதன் பிறகு அவள் இனியவனை விட்டு செல்லவே இல்லை. ஒரு விஷயத்தை அவள் கவனித்தாள். இனியவன் அவளது செயலையும், வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

ஆழ்வியின் மடியில் படுத்துக்கொண்டு, அவளது சேலை முந்தானையை இப்படியும் அப்படியும் திரும்பி பார்த்தவாறு இருந்தான் இனியவன். ஆழ்வி அவனோடு விளையாட நினைத்து, அவன் மூக்கை கிள்ளினாள். அவனும் அவள் மூக்கை கிள்ளினான். அவள் அவன் காதை பிடித்து இழுத்தாள். அவனும் அவள் காதை பிடித்து வேகமாய் இழுத்தான், தன் கையின் வேகத்தை கட்டுப்படுத்தும் திறன் இல்லாததால்.

"ஆ..." என்றாள் ஆழ்வி.

திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான் இனியவன். உதடு சுழித்து அவனை பார்த்தாள் ஆழ்வி. தன் உதடுகளை அழுத்திக்கொண்டு, தலையை குனிந்து ஓரக் கண்ணால் அவளை பார்த்தான் இனியவன். அவனது அந்த செய்கை அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது.

அவள் கையை எடுத்து தன் காதை பற்றி இழுக்கச் செய்தான் இனியவன். அவளும் அதை செய்ய, அவன்,

நீயின்றி அமையாது (என்) உலகு...!Where stories live. Discover now