38 இணைக்கப்பட்ட புள்ளிகள்...
"நம்ம மாமல்லபுரத்துல சந்திச்சோமே" என்று ஆர்வம் ததும்ப அவன் கூற, அது இனியவனை மேலும் குழப்பியது.
"மாமல்லபுரமா? நான் மாமல்லபுரத்துக்கு போனதே இல்ல"
"அட... போன மாசம் மாமல்லபுரம் வந்திருந்தீங்களே..."
"நீங்க வேற யாரையோ நினைச்சு பேசிகிட்டு இருக்கீங்க"
"நான் அடிச்சு சொல்லுவேன், அது நீங்க தான். அன்னைக்கு உங்க வைஃப்கிட்ட என்ன பேசினீங்கன்னு கூட எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு"
"வைஃபா?"
"ஆமாம்"
"இல்ல இல்ல, நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க..."
"டிஎன் 09 ஏஜே 1000 உங்க கார் நம்பர் தானே?"
இனியவன் திகைத்தான். ஆம், அது அவர்கள் வீட்டில் இருக்கும் காரின் எண் தான். அவனுக்கு ஆச்சரியம் அளித்தது என்னவென்றால், அன்று அவன் அந்த காரில் வரவில்லை. வேறு ஒரு காரில் வந்திருந்தான். அப்படி இருக்கும் பொழுது, அவன் வீட்டில் இருக்கும் காரின் எண், இந்த மனிதனுக்கு எப்படி தெரிந்தது?
"என்னோட கார் நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்?"
"எந்த ஃபேன்சி நம்பரையும் நான் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டேன். அதே மாதிரி, அன்னைக்கு நீங்க சொன்னதையும் நான் இன்னும் மறக்கல" என்றான் நம்பிக்கையோடு.
"நான் அன்னைக்கு என்ன சொன்னேன்?" என்றான் இனியவன்.
"உங்க வைஃப் கிட்ட உங்க அம்மாவை பத்தி கேட்டீங்க"
"அம்மாவை பத்தியா? என்ன கேட்டேன்?" என்றபடி சிக்னலை ஏறிட்டான். இன்னும் 60 நொடிகள் இருந்தன.
அந்த மனிதனும் சிக்னலை பார்த்துவிட்டு, கடகடவெ ஒப்பிக்க ஆரம்பித்தான்.
"உங்க வைஃப்கிட்ட உங்க அம்மா எங்கன்னு கேட்டீங்க. அவங்க சாமிகிட்ட போயிட்டதா அவங்க சொன்னாங்க. நீங்க ஏன்னு கேட்டீங்க. சாமிய பார்க்க போயிருக்காங்கன்னு அவங்க சொன்னாங்க. அதை கேட்டு, நீங்க டீப்பா யோசிச்சிங்க. உங்களுக்கு அம்மா இல்லன்னு கஷ்டமா இருக்கான்னு அவங்க கேட்டதுக்கு, நீங்க இல்லன்னு சொன்னீங்க"
ČTEŠ
நீயின்றி அமையாது (என்) உலகு...!
Romanceஇளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத...