64 புரிந்து கொள்ள அரிதான
அமைதியாய் அமர்ந்தாள் ஆழ்வி. அவளிடம் வந்து அவள் கரங்களை பற்றிக் கொண்டாள் நித்திலா.
"தயவுசெஞ்சு என்னை மன்னிச்சிடுங்க ஆழ்வி. என்னால் தான் நீங்க இவ்வளவு பெரிய கஷ்டங்களை உங்க வாழ்க்கையில சந்திக்கிறீங்க" என்றாள் குற்ற உணர்ச்சியோடு.
"இதுல புதுசா என்னக்கா இருக்கு? இந்த வீட்ல எப்ப நான் காலடி எடுத்து வச்சேனோ அப்பவே என்னோட கெட்ட நேரம் ஆரம்பிச்சுடுச்சு" என்றாள் வேதனையோடு.
"நீங்க கவலைப்படாதீங்க, ஆழ்வி. இன்னு உங்களை நிச்சயம் ஏத்துக்குவான்" என்று அவளுக்கு நம்பிக்கையூட்ட முயன்றாள் நித்திலா.
"இல்லக்கா. அவரு வேற ஒரு பொண்ணை விரும்புறார்னு நினைக்கிறேன். அதனால தான் அவர் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருக்காரு"
மிதிலா தன் கைகளை பிசைந்தாள்.
"அவரோட வாழ்க்கையில சங்கடத்தை கொடுக்கிற ஒருத்தியா இருக்க நான் விரும்பல. அவருக்கு என்னை பிடிக்கலைன்னா நான் நிச்சயம் இங்கிருந்து போயிடுவேன்"
"தயவுசெஞ்சி அப்படி எல்லாம் சொல்லாதீங்க, ஆழ்வி" என்று கெஞ்சினாள் நித்திலா.
"வேற என்ன தான் செய்ய சொல்றீங்க?"
"எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கன்னு சொல்றேன்" என்றாள்.
பெருமூச்சு விட்டாள் ஆழ்வி.
சித்திரவேல் அங்கிருந்து நழுவி சென்றதை நித்திலா கவனிக்கவில்லை. ஆனால் ஆழ்வி கவனித்தாள். அவன் டாக்டருக்கு ஃபோன் செய்ய செல்கிறான் என்று அவளுக்கு புரிந்தது. அவனது கெட்ட நேரம் அந்த டாக்டரின் கைபேசி எண் அவுட் ஆஃப் ரேஞ்சில் இருந்தது.
சித்திரவேல் எரிச்சல் அடைந்தான். மறுபடியும் அந்த எண்ணுக்கு அவன் தொடர்பு கொள்ள முயன்றான். அப்பொழுதும், அது அவுட் ஆஃப் ரேஞ்சில் தான் இருந்தது. அதனால் வேறொரு எண்ணுக்கு தொடர்பு கொண்டான். இந்த முறை அவனது அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது
ESTÁS LEYENDO
நீயின்றி அமையாது (என்) உலகு...!
Romanceஇளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத...