10 ஒப்புதல்

573 47 6
                                    

10 ஒப்புதல்

"இந்த நிமிஷத்திலிருந்து, உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது. எக்காரணத்தைக் கொண்டும் நீங்க என் மாமியார் வீட்ல காலடி எடுத்து வைக்கக் கூடாது. நான் செத்தாலும் என் சாவுக்கு நீங்க வரக்கூடாது" என்றாள் ஆழ்வி தீர்க்கமாக.

கற்பகமும் சொல்லின்செல்வனும் அதிர்ச்சியோடு நின்றார்கள்.

"அவ நம்ம மேல கோவமா இருக்கா. அதனால தான் இப்படி எல்லாம் பேசுறா. எல்லாம் சரியாயிடும்" என்றான் சொல்லின்செல்வன் தன்னை சுதாகரித்துக் கொண்டு.

"ஆமா, அவ எந்த அளவுக்கு என் மேல பிரியம் வச்சிருக்கான்னு எனக்கு தெரியாதா?" என்றார் கற்பகம்.

"நான் உங்க மேல பிரியமா தான் இருந்தேன்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும்! ஆனா இனிமே அந்த பிரியம் இருக்காது. ஏன்னா, என்னோட அன்புக்கு நீங்க தகுதியானவங்க இல்ல." என்றாள் உறுதியுடன்.

"உனக்கு கிடைச்சிருக்கிற வாழ்க்கைக்காக ஒரு நாள் நீ எனக்கு நன்றி சொல்லுவ பாரு"

"எனக்கு எந்த மாதிரி வாழ்க்கை கிடைக்கப் போகுதுங்குறது இந்த விஷயமே இல்ல. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட பேசினீங்க பாரு... அது தான் விஷயம். நான் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தேன். ஆனா நீங்க என்ன சொன்னீங்க? நான் சுயநலவாதியா? அப்படியே இருக்கட்டும்... நீங்க பணத்தை வச்சுக்கிட்டு சந்தோஷமா இருங்க"

தன் அறைக்குச் சென்று கதவை சாத்தாமல் நின்று,

"கல்யாணத்தைப் பத்தி நித்திலாகிட்ட நான் பேசிக்கிறேன். நீங்க யாரும் பேச வேண்டியதில்ல" என்று கூறிவிட்டு கதவை சாத்திக்கொண்டாள்.

இன்பவனம்

இனியவன் இருந்த அறையின் கிரில் கேட்டின் வழியாக ஒரு கிளாஸ் பாலை உள்ளே வைத்தான் முத்து. அவன் அதை குடித்து முடிக்கும் வரை காத்திருந்தான். அதை குடித்த இனியவன், அரை மயக்க நிலைக்குச் சென்றான். தன் பெருவிரல் ரேகையை சென்சாரில் அழுத்தி, அந்த கதவை திறந்தான் சித்திரவேல்.

நீயின்றி அமையாது (என்) உலகு...!Where stories live. Discover now