Chapter 5

2.7K 101 32
                                    

அன்று முழுவதும் ருத்ரனும் யாழினியும் பேசிக் கொண்டே இருந்தனர்.ஏன்?எதற்காக? என்று இருவருக்குமே தோன்றவில்லை.இதற்கு முன் சிலர் யாழினியிடம் தங்கள் காதலைச் சொன்ன போதும் கூட,'விருப்பமில்லை' என்றுக் கூறி மறுத்து விட்டாள்.தந்தை பார்க்கும் மாப்பிள்ளையோடு தான் திருமணம் என்று உறுதியாக இருந்தாள்.அதுமட்டுமல்லாமல் மாறிக் கொண்டே இருக்கும் இந்தக் கால காதலின் மீது பெரிதும் நம்பிக்கை இன்றி இருந்தாள் யாழினி.சிறிதும் சலனம் வரவிடாமல் மனதை கல்லாக வைத்திருந்தாள்.ருத்ரனிடம் மட்டும் ஏன் இந்த ஈர்ப்பு என்று அவளுக்குத் தெரியவில்லை.

பெண்களிடம் அளவாகவே பேசும் ருத்ரன் சிறிதும் தயக்கம் இன்றி யாழினியிடம் அரட்டை அடித்தான்.அவளிடம் மட்டும் சிரித்தவாறே பேசினான்.அவளிடம் பேசுவது ஒரு வித இதமான உணர்வை கொடுத்தது.அவளது குழந்தை தனமான பேச்சு அவனுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மறுநாள் இருவருமே
அவரவர் வேலையில் மூழ்கியிருந்தனர்.அவ்வப்போது நேரம் கிடைத்தப் போது பேசினர்.ருத்ரனுக்கு யாழினியிடம் ஒரு நெருக்கம் தோன்றவே,“யாழினி,முகநூலில் பேசுவது வசதியாக இல்லை எனக்கு,உங்களது கைபேசி எண் கிடைக்குமா?” என்று கேட்டான்.“நேற்று தானே பேச ஆரம்பித்தோம்,அதற்குள் கைபேசி எண் கேட்கிறாரே,ஆனால் இவர் தெரியாத ஆள் இல்லையே,பார்த்த மாதிரி தானே இருக்கிறது” என்று நினைத்தவள், “நாம் இன்னும் பேச வேண்டும், எனக்கு கொடுக்க தோன்றும் போது நிச்சயமாக தருகிறேன்” என்று மெதுவாக சொன்னாள்.அதன் பிறகு ருத்ரன் அதைப் பற்றி பேசவே இல்லை.அவனின் கண்ணியத்தை பார்த்து வியந்தவள்,அவளாகவே தன் கைபேசி எண்ணை கொடுத்தாள்.

கருத்தரங்கம் முடிய தாமதமாகும் என்பதால் சற்று முன்னதாகவே வீடு வந்து சேர்ந்தாள் யாழினி.ருத்ரனும் வேலை சீக்கிரமாகவே முடிந்து விட்டதால் தன் அறைக்கு வந்து சேர்ந்தான்.அலுப்பு தீர ஒரு குளியல் போட்டு விட்டு வந்தவன் யாழினியின் நியாபகம் வந்தவனாய் 
அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.இரவு உணவை முடித்து கொண்டு வந்தவள்,அவனது செய்தியை(message)பார்த்து விட்டு,அவனோடு பேச ஆரம்பித்தாள்.இருவருமே பல கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள்.

தோயும் மது நீ எனக்கு(Edited)Where stories live. Discover now