அப்புறம் முக்கியமான விஷயம் கண்ணம்மா,அப்பா என்னைக் கூப்பிட்டு தன் பெயரில் உள்ள நிலத்தை என்னுடைய பெயருக்கு எழுதப்போகிறாராம்; என் பெயரில் எதாவது சொத்து இருந்தால் பெண் தேட வசதியாக இருக்குமாம்;எனக்கும் மதிப்பு இருக்குமாம்;நாளைக்கு திருமண மையத்தில் என்னைப் பற்றிய விவரத்தை பதிவு செய்ய போகிறாராம்!" என்று இறுக்கமாக கூற, விதிர்வித்து போனது யாழினிக்கு.
"என்ன சொல்றீங்க ருத்ரா?" என்று அவள் குரல் உடைந்து போக, "பதறாதே கண்ணம்மா,இப்போது எனக்கு இதை யோசிக்க நேரமில்லை என்று சொல்லிவிட்டேன்.எவ்வளவு நாள் இப்படியே சொல்ல முடியும் என்று தெரியவில்லை!நீ கவலைப் படாதே கண்ணம்மா,உன் படிப்பு முடியட்டும் முதலில்" என்று ஆறுதலாக கூறினான் ருத்ரன்.
மனதிற்கு சற்று இதமாக உணர்ந்தாலும் ஏனோ பயமாகவே இருந்தது யாழினிக்கு.அறியாத வயதில் பெற்றவளை இழந்தாலும் தாயாகவும் தந்தை இருந்ததால் காயத்தின் வலி குறைவாகவே உணர்ந்தாள்.ஆனால் மனதில் வேரூன்றி விட்ட ருத்ரனை இழப்பது பற்றி அவளால் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று.அவளின் பலம் பலவீனம் இரண்டும் ருத்ரனே!
ருத்ரனின் மறுப்பை மீறி அவனது தந்தை தேவன் திருமண மையத்தில் பதிவு செய்து விட,இரண்டு மூன்று இடங்கள் வந்து விட்டது.ருத்ரனிடம் பெண்களின் புகைப்படங்களை கொடுக்க,தன் சொல்லை மீறி தந்தை செய்து விட்டார் என்ற கோபத்துடன் அவற்றை தொட்டு கூட பார்க்கவில்லை ருத்ரன்.இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட அங்கே தந்தை மகன் இடையில் பனிப்போர் உருவானது.
இதை அறிந்த யாழினிக்கு மனதிற்கு வருத்தமாக இருந்தது.திருமணத்திற்கு முன்பே தன்னால் தந்தை மகன் நல்லுறவு கெடுவது அவளுக்குப் பிடித்தமானதாக இல்லை.யாழினி எவ்வளவு சொல்லியும் ருத்ரன் பிடிவாதமாக இருந்தான்.தேவனும் பேசாமல் கோபமாகவே இருக்க, யாழினி தான் கடினமான இந்த நிலையை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் வருந்தினாள்.
சிறு சிறு உரசல்களுடன் நாட்கள் செல்ல சூழ்நிலை சற்று இதமாக மாறியது.தந்தை மகனுக்கு இடையில் நடந்த பனிப்போரும் உருகி போனது.யாழினிக்கும் நிம்மதியாக இருந்தது.யாழினியின் பிறந்த நாள் அடுத்த வாரத்தில் வரவிருக்க,அதை பற்றி மூச்சு கூட விடவில்லை ருத்ரன்.அவனுக்கு நினைவு இருக்குமா என்று நினைத்தாலும் அவளும் அதைப் பற்றி பேசவில்லை.யாழினியின் தோழிகளில் ஒருத்தியான சமன்விதா உடன் ரகசியமாக பேசி யாழினிக்கு பிறந்தநாள் பரிசு வாங்கினான்.அவனது அமைதியை கண்டு யாழினி குழம்பி போக,மறுநாள் வரும் பிறந்தநாளுக்கு அன்று மாலை முன்னதாகவே வாழ்த்து அனுப்பினான் ருத்ரன்.மகிழ்ச்சியாக அவனுடன் உரையாட,சரியாக பன்னிரண்டு மணிக்கு கைபேசியில் அழைத்து ,"பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணம்மா" என்று கூற திக்குமுக்காடி போனாள் யாழினி.அவனுடன் சிறிது நேரம் பேச,அடுத்து அவளது தந்தை மற்றும் தோழிகள் சமன்விதா,ஜானவி, நக்ஷத்ரா மூவருமே வாழ்த்தினார்கள்.பின்னர் அவளது உற்ற நண்பன் ஈஸ்வர் வாழ்த்த,உரிமையாக இவ்வளவு நாள் சரியாக பேசாமல் இருந்ததற்கு சண்டையிட்டாள்.அவன் கிண்டல் அடிக்க சமாதானம் ஆனவள் சிறிது நேரம் அவனுடன் பேசினாள். பள்ளி கல்லூரி நண்பர்களும் குறுஞ்செய்தி அனுப்பி வாழ்த்தினார்கள்.
أنت تقرأ
தோயும் மது நீ எனக்கு(Edited)
عاطفيةவேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!