யாழினியின் காத்திருப்பு பொய்யாகவில்லை.
ருத்ரனிடம் இருந்து என்று செய்தி(மெசஜ்)வந்திருந்தது.ஆவலுடன் அவனுடன் பேச ஆரம்பித்தாள்.
“நலமா யாழினி?”
“நலம் தான்,நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?”
“நானும் நலம் தான் யாழினி”
என்று இருவரும் அவர்களைப் பற்றியும் அவர்களது குடும்ப விபரங்களையும் பரிமாறிக் கொண்டனர்.
அதன் பிறகு இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
ருத்ரனுக்கு அவளை எங்குப் பார்த்தோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.யாழினிக்கும் அவனை எங்கேயோ பார்த்தது போல் இருந்தாலும்,அவனுடன் பேச வேண்டும் என்ற ஆவல் தான் அதிகமாக இருந்தது.எப்படி கேட்பது என்று யோசித்தவன்,தன் மனக்குழப்பம் தீர,
“யாழினி உங்களை இதற்கு முன்னால் எங்கேயோ பார்த்தது போல இருக்கிறது” என்று மெதுவாக சொன்னான்.என்ன இவன் நாம் நினைத்ததையே கேட்கிறான் என்று யோசித்தவள்,“எனக்கும் உங்களை எங்கேயோ பார்த்தது மாதிரி தான் இருக்கிறது ருத்ரன்” என்றுச் சொன்னாள்
இது என்னடா விசித்திரமாக இருக்கிறது,அது எப்படி இருவருக்குமே ஒரே மாதிரி தோன்றும்! என்று மேலும் குழம்பினான் ருத்ரன்.ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,“அப்புறம், மதிய உணவு முடிந்ததா யாழினி?” என்று கேட்டான்.யாழினியிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.சற்று நேரம் காத்திருந்து விட்டு தன் வேலைக்குள் மூழ்கினான்.அதற்கு பின் நேரம் போனதே தெரியவில்லை ருத்ரனுக்கு.வேலையை முடித்து விட்டு நிமிரும் போது முகநூலில்(facebook)இருந்து செய்தி வந்திருந்தது, யாழினி தான் அனுப்பியிருந்தாள்.“மன்னிக்கவும் ருத்ரன், அடுத்த வாரம் நடைபெற உள்ள சுகாதார கருத்தரங்கிற்கு(conference on health) ஒத்திகை நடந்தது,அதனால் பேச முடியவில்லை”.சுகாதார கருத்தரங்கம் என்றவுடன் ருத்ரனுக்கு மூளையில் மின்னல் அடித்தது.யாழினியை எங்குப் பார்த்தான் என்று நினைவுக்கு வந்து விட்டது.குழப்பம் நீங்கிய மகிழ்ச்சியில் யாழினியிடம் உடனே அதை சொல்ல முற்பட்டான்.
“யாழினி,உங்களை எங்கே பார்த்தேன் என்று கண்டு பிடித்து விட்டேன்,இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே சுகாதார கருத்தரங்கில் கலந்து கொள்ள என் கல்லூரி சார்பாக உங்கள் கல்லூரிக்கு வந்தேன்,அப்போது நான் கவனிக்காத போது என்னுடைய சட்டைப் பையில் இருந்து 'பென் டரைவ்' கீழே விழுந்து விட்டது, ரொம்ப முக்கியமான பென் டிரைவ் அது. ஒரு பெண் தான் அதை எடுத்துக் கொடுத்தாள்,அந்த பெண் நீங்கள் தான் என்று நினைக்கிறேன் யாழினி”அவன் சொன்னதை கேட்டவளுக்கு வியப்பாக இருந்தது.'இது என்ன சினிமாவில் வருவது மாதிரி இருக்கிறது,இப்படி எல்லாம் நடக்குமா என்ன!எனக்கு எதுவும் நினைவில் இல்லையே,ஆனா இவரை எங்கேயோ பார்த்த மாதிரி தான் இருக்கிறது' என்று குழம்பிப் போனாள்.எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை யாழினிக்கு.அதற்குள் ருத்ரனிடமிருந்து அடுத்த செய்தி வந்தது.
“என்னவாயிற்று யாழினி?”
“நன்றாக யோசித்துப் பார்த்து விட்டேன் நினைவுக்கு வரவில்லை ருத்ரன்,ஆனால் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி மட்டும் இருக்கிறது”
“பரவாயில்லை யாழினி,ரொம்ப யோசிக்க வேண்டாம்,ஒரு நிமிடம் பார்த்தது நினைவில் இருப்பது கடினம் தான்,எனக்குமே அவ்வளவு உறுதியாக தெரியவில்லை,விடுங்கள்,நாம் வேறு பேசலாம்”
“அதுவும் சரிதான்,உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்,ஏன் என்ஜீனியரிங் படிக்கும் மாணவர்கள் நிறைய பேர் பெரிது பெரிதாக இருக்கிறார்கள்” என்ற தன் நெடு நாள் சந்தேகத்தை கேட்டாள்.அதை படித்த ருத்ரன்,அலுவலகம் என்றும் பாராமல் விழுந்து விழுந்து சிரித்தான்.இவனுக்கு கூட சிரிக்க தெரியுமா? என்று ஆச்சரியமாக பார்த்தார்கள் கூட வேலை செய்பவர்கள்,குறிப்பாக பெண்கள்.
சிரிப்பை அடக்க முடியாமல்,“என்ன கேட்டீர்கள் யாழினி,கடவுளே!ஏன் இப்படி சிரிப்பு வருகிறது என்று தெரியவில்லையே” என்று மீண்டும் சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறீர்கள் ருத்ரன்,என் சந்தேகத்தை தானே கேட்டேன்,பதில் சொல்லுங்கள்”
“இப்படி எல்லாம் கேட்டால் என்ன சொல்ல முடியும்,உங்களுக்கு எல்லாருமே பெரியதாக தான் இருப்பார்கள் யாழினி”
“நான் குள்ளம் என்பதை சொல்லாமல் சொல்கிறீர்களா?” என்று கேட்டாலும் அவன் பதிலைப் பார்த்து ரசித்து சிரித்தாள்.
“உங்களை போய் அப்படி சொல்ல முடியுமா யாழினி,உங்களுக்கு என்ன அழகாக அம்சமாக இருக்கிறீர்கள்” என்று பாராட்டினான்.
இதை மட்டும் அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் பார்த்திருந்தால் அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பார்கள்.யாழினியோ சிறிது வெட்கத்துடன்,“நன்றி” என்று அனுப்பினாள்.பல நாள் பழகியது போல் ஏன் பேசுகிறோம் என்பதை இருவருமே உணரவில்லை.மனிதமனம் விசித்திரமானது.எந்தப் பாதையில் நம்மை இழுத்துச் செல்கிறது என்பதை காலப்போக்கில் தான் புரிந்து கொள்ள முடியும்.பெரிய யோகிகளுக்கே மனதைப் புரிந்து கொள்ள பல காலம் தேவைப்படும் போது,ருத்ரனும் யாழினியும் சாதாரண மனிதர்கள் தானே!

CZYTASZ
தோயும் மது நீ எனக்கு(Edited)
Romansவேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!