Chapter 24

1.4K 72 33
                                    

மகரந்த வாசனை நாசியை துளைக்க, ருத்ரன் கண்களை மெல்ல திறந்து பாரக்க, கடல் அலைகளைப் போல் கரு கருவென்று இருந்த தன் தலை முடியை அவன் முகத்தில் படர விட்டு பஞ்சு மூட்டையை போல் அவன் மீது உறங்கிக் கொண்டிருந்தாள் யாழினி. தன் முகத்தில் இருந்த முடியை ஒதுக்கியவன், குழந்தையை போல உறங்கி கொண்டிருந்த அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன். அவளிடம் சிறு அசைவு தெரியவே, அவளது முடியில் கைகளை விட்டு தடவி கொடுத்தான். அவன் தொடுதல் தந்த இதத்தில் அவனை இன்னும் இறுக்கி அணைத்து கொண்டாள் யாழினி. அவள் காதருகில் சென்று, "ஓய் பொண்டாட்டி" என்று கிசுகிசுப்பாக அழைத்து தன் தாடி மீசையால் அவளது காது மடல்களை உரசினான். உடல் எங்கும் கிளர்ச்சி பரவ கண்களை மெல்ல திறந்து அவனது கண்களுக்குள் படர விட்டாள்.

அவளது இடையை கைகள் வளைக்க அவள் முகம் நோக்கி அவன் செல்ல, இரவு வைத்த அலாரம் உச்சபட்ச சத்தத்தில் அலறியது. எரிச்சலுடன் ருத்ரன் அதை அணைக்க, அவன் மீது சாய்வாக அமர்ந்து கொண்டாள் யாழினி. அவனை அப்படியே இறுக அணைத்துக் கொண்டு முகமெங்கும் தன் முத்திரைகளை பதிக்க, அவளது இதழ்கள் அவன் இதழ்களை கவ்வியது. சில நிமிடங்கள் கரைய, இருவரும் மூச்சு விடுவதற்காக பிரிந்தனர். அவளது இடையை இறுக அணைத்து அவள் நெஞ்சில் தலை சாய்த்து கொண்டான்.

அவன் தலையை மெல்ல தடவி கொடுத்தவள், " அலுவலகம் செல்ல வேண்டாமா?" என்று மெதுவாக கேட்க, "வேண்டாம், இப்படியே இருக்கலாம்" என்று இன்னும் அவளை இறுக்கிக் கொண்டான். அவன் நெற்றியில் முத்தமிட்டு, "புதிதாக வேலைக்கு எடுத்தவர்களை அவர்களுக்கான குழுவில் சேர்க்க வேண்டும், சீக்கிரம் செல்ல வேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா! நீங்களே தாமதமாக சொல்லலாமா! என் சமத்து இல்லை 😚 குளித்து விட்டு வாருங்கள், சாப்பிட்டு விட்டு கிளம்பலாம், என்னையும் கல்லூரியில் விட்டு விடுங்கள்" 😚 என்று கொஞ்சி எழுப்ப, "ராட்சசி" என்று அவளது கன்ன கதுப்புகளை கடித்து விட்டு குளியலறைக்குச் சென்றான் ருத்ரன்.

தோயும் மது நீ எனக்கு(Edited)Où les histoires vivent. Découvrez maintenant