Chapter 16

1.9K 83 17
                                    

மறுவீடு மற்றும் உறவினர்கள், நண்பர்களின் விருந்து என சில நாட்கள் கரைந்தது. யாழினிக்கும் ருத்ரனுக்கும் அலைச்சல் சற்று அதிகமாக இருந்தது. திருமண அலுப்பு அதிகமாக இருந்ததால் ருத்ரனின் பெற்றோர் வீட்டிலேயே இருந்து விட்டனர். யாழினியும் ருத்ரனும் தனிமையை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.

அன்று மதியம் விருந்து ஒன்றை முடித்து விட்டு தங்களது அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள் யாழினியும் ருத்ரனும். தேவனிடம் இருந்து அழைப்பு வரவே இருவரும் அவரது அறைக்கு சென்றார்கள்.
"என்ன அப்பா? எதற்காக அழைத்தீர்கள்? ஏதேனும் வேண்டுமா? என்று கனிவாக கேட்டாள் யாழினி.
அவளை அன்போடு பார்த்துக்கொண்டு,"உங்களிடம் பேச வேண்டும், அதனால் தான் கூப்பிட்டேன் மா" என்றவர், மகனை பார்த்துக் கேட்டார்.
"முக்கியமான விருந்து எல்லாம் முடிந்து விட்டதல்லவா! யாழினியை அழைத்துக்கொண்டு தேனிலவு போக வேண்டாமா ருத்ரன்! மற்ற விருந்துகள் எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம், இதுவரை எப்படி இருந்தாயோ அது முக்கியமில்லை; இனிமேல் மருமகளுக்கான நேரத்தை ஒதுக்கி விடு"
" என்னப்பா நீங்கள்!" என்று சொல்லிச் சிரித்தவன், "காதலித்து திருமணம் செய்து கொண்டவன் நான், அவளை பார்த்துக் கொள்வது என் பொறுப்பு" என்றான் அமர்த்தலாக.
"அதனால் தான் சொல்கிறேன் மகனே!காதலிப்பவள் தானே; மனைவி தானே; என்று காலப்போக்கில் மனம் நினைக்க தொடங்கி விடக்கூடாது; இளமையில் இருக்கும் காதல், முதுமையிலும் இருக்க வேண்டும்; போக போக நீயே புரிந்து கொள்வாய், முதலில் நீங்கள் இருவரும் தேனிலவு எங்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுங்கள்" என்று தீர்மானமாக கூறி விட்டு மாலை செய்தித்தாள்களில் மூழ்கினார்.

தங்கள் அறைக்கு வந்தவுடன் தன் கை வளைவில் யாழினியை கொண்டு வந்து " என்னடி அழகி! வீட்டில் உனக்கு தான் மதிப்பு அதிகம் போலவே, என்னையும் சற்று கவனி" என்று கண்ணடித்து மேலும் அணைப்பை இறுக்கினான் ருத்ரன். "ரொம்ப தான் உங்களுக்கு, இந்த வீட்டு இராஜாவே நீங்கள் தான், தனி கவனிப்பு தான் உங்களுக்கு எப்போதும்" என்று அவன் அருகாமை தந்த கிறக்கத்துடன் கூறினாள் யாழினி. அவளது மயக்கம் அவனை உசுப்பி விட அவள் மேனியில் இதழ் ஊர்வலம் நடத்தினான். சிறிது நேரத்தில் அவளை விடுவித்தவன், தன் மடியில் அவளை உட்கார வைத்து, இடையை வளைத்து கொண்டு ஆசையாக கேட்டான்.

தோயும் மது நீ எனக்கு(Edited)حيث تعيش القصص. اكتشف الآن