Chapter 27

1.2K 63 13
                                    

யாழினியின் கண்கள் பேசும் மொழி புரியாமல் அவளையே குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன். மகிழ்ச்சியில் வார்த்தைகள் வர மறுக்க தன் நிலையை தன்னவனிடம் புரிய வைக்க திணறிக் கொண்டிருந்தாள் யாழினி. அவளின் உணர்ச்சி போராட்டம் புரிந்தது போல் அவளை அமைதிப் படுத்தும் விதமாக தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்து கொண்டான்.

அவன் நெஞ்சில் சாய்ந்து யாழினி இளைப்பாறிக் கொண்டிருக்க, அவளது கைகள் கடல் மணலில் விளையாடிக் கொண்டிருந்தது. அவனிடம் இருந்து மெல்ல விலகி அவன் கண்களை காதலுடன் பார்த்தாள் யாழினி. அவனது நெற்றியில் அழுந்த முத்தமிட்டு கடல் மணலை நோக்கி கை காட்டி விட்டு வெட்கத்துடன் அவனது மார்பில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

என்றும் இல்லாத அவளது செய்கை அவனைக் குழப்ப, அவள் காட்டிய இடத்தைப் பார்த்தான் ருத்ரன். ஒரு இதயத்திற்குள் இன்னொரு இதயம் இருக்க, அதற்குள் ஒரு சிறிய இதயம் இருந்தது போல் வரைந்து இருந்தாள் யாழினி. அவனுள் துடித்துக் கொண்டிருக்கும் அவளுள் இன்னொரு ஜீவன் வளர்வதை சொல்லாமல் உணர்த்தி விட, மகிழ்ச்சியில் தள்ளாடி போனான் ருத்ரன்.

யாழினியின் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டு அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டான். அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள, அவனது கைகளை தன் வயிற்றில் வைத்துக் கொண்டாள் யாழினி.

"கண்ணம்மா"😍

"சொல்லு மாமா"😍

"நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று வார்த்தைகளால் சொல்ல முடியவில்லையடி  கண்ணம்மா"😍

"நானும் தான் மாமா" 😍😌

"எப்போது தெரியும் கண்ணம்மா?"

"இரண்டு நாட்களாகவே உடம்பு ஒரு மாதிரியாக தான் இருந்தது மாமா; நாள்காட்டியை பார்த்த போது தான் தெரிந்தது நாட்கள் தள்ளி போயிருக்கிறது என்று! உடனே மருந்தகத்தில் இருந்து 'கர்ப்பத்தை உறுதி செய்யும் சோதனை கருவி' (pregnancy test kit) வாங்கி சோதித்துப் பார்த்தேன், அப்போது தான் தெரிந்தது" 🙈😌❤

தோயும் மது நீ எனக்கு(Edited)Where stories live. Discover now