Chapter 10

1.9K 82 45
                                    

நாட்கள் பறந்து செல்ல,ருத்ரன் மீண்டும் மும்பைக்கு சென்று விட்டான்.எப்போதும் போல் தினமும் பேசினாலும் அவனுடன் இருந்த நிமிடங்களுக்காக ஏங்கினாள் யாழினி.அவளது ஏக்கத்தை அவ்வப்போது அவனிடம் சொல்லிக்கொண்டே இருந்தாள்.யாழினியின் ஏக்கம் புரிந்தாலும் ருத்ரனும் தான் என்ன செய்வான்?பாவம்! ருத்ரனுமே அவளது அருகாமைகாக தானே தவித்தான்.இறுக்கமாக இருப்பவன் என்பதால் ருத்ரனுக்கு உணர்ச்சிகள் இல்லை என்று ஆகிவிடாதே!

இருவரின் உலகமும் அழகாக ஆழமாக போய் கொண்டிருக்க அதை சோதிக்கும் விதமாக சோதனை ஒன்று வந்தது.ருத்ரன் அன்று கோபமாகவும் இறுக்கமாகவும் இருக்க,தன்னை சமன்படுத்த முடியாமல் தன்னவளை நாடினான்.
"ஓய் ருத்ரா! என்ன செய்கிறாய்?"
"சும்மா டீ குடிக்க வந்தேன்"
"என்னவாயிற்று குழந்தைக்கு,ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு"
"எனக்கு திறமை இல்லையாடி?வேலை செய்ய தெரியாதாடி?சொல்லுடி? என்று ருத்ரன் வெடிக்க,
"யார் சொன்னது?அறிவில்லாதவர்கள் தான் அப்படி சொல்லுவார்கள்,என் மாமாஅறிவாளி;திறமைசாலி,இப்போது சொல்லுங்கள் என்ன நடந்தது?" என்று அவனை தேற்ற முயற்சித்தாள் யாழினி.
"வேலை போக போகிறது யாழினி!"
"ஏன்?என்னவாயிற்று மாமா"
"நன்றி கெட்ட மனிதர்கள்!இவ்வளவு நாட்கள் பெரிய பெரிய வேலை எல்லாம் முடித்துக் கொடுத்திருக்கிறேன் இந்த கம்பெனிக்கு,இப்போது என்னவென்றால் என்னையே வேலையை விட்டு போக வைக்க துடிக்கிறார்கள்" என்று அவன் பல்லை கடித்துக் கொண்டு கர்ஜிக்க
"மாமா,உனக்கு இருக்கிற திறமைக்கு வேறு நல்ல வேலையே கிடைக்கும்,அவர்கள் என்ன உன்னை வேலையை விட்டு போக வைப்பது,நீயே வேறு நல்ல வேலையை தேடிக்கொள் மாமா" என்று தேற்றினாள்.

இறுக்கம் சற்று தளர"ஆமாம் யாழினி,வேலையை விட போகிறேன்,மூன்று மாதம் கால வரையறை முடிவதற்குள் இதை விட நல்ல கம்பெனியில் நல்ல வேலையை தேடிக்கொள்ள வேண்டும்" என்று முடிவுக்கு வந்தவனாக கூறினான் ருத்ரன்.
"ஆமாம் மாமா!நிச்சயம் உன்னால் முடியும்,எனக்கு நம்பிக்கை இருக்கிறது மாமா" என்று தன்னால் முடிந்த வரை அவனை ஊக்குவித்தாள் யாழினி.

தோயும் மது நீ எனக்கு(Edited)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin