(மன்னிக்கவும் அன்பு வாசகர்களே! கல்லூரியில் தேர்வுகளால் பதிவு போட முடியவில்லை, முடிந்தவரை சீக்கிரம் போடுகிறேன். கதையின் நிறைகுறைகளை எடுத்து கூறுங்கள். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!)
இனிமையான நினைவுகளுடன் சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள் யாழினியும் ருத்ரனும். புதிய வீடு, புதிய உறவுகள் என்றாலும் யாழினி தன் புகுந்த வீட்டோடு ஒன்றிப்போனாள். விடுமுறை முடிந்ததால் யாழினியும் ருத்ரனும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். நாட்கள் இயல்பாக நகர்ந்து கொண்டிருக்க, ருத்ரன் சற்று அதிகமான வேலையில் மூழ்கி கொண்டான். யாழனியின் மேல் அளவு கடந்த அன்பு இருந்தாலும், தன்னை அறியாமல் ஒரு சிறு இடைவெளி உருவாக்கி கொண்டிருப்பதை உணர மறந்து விட்டான் ருத்ரன்.
அவனை விட முன்னதாகவே வீடு வந்து சேரும் யாழினி, மாமனார் மாமியாருடன் நேரத்தை கழித்தாள். மாலை வேளையில் தானியங்கள் அல்லது பருப்பு வகைகளில் மிதமாக சிற்றுண்டி செய்து கொடுப்பாள். மாமனார் தேவன் உடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பாள். பள்ளி முடிந்து வரும் மாமியார் இளமதியை அமர வைத்து சிற்றுண்டி கொடுத்து, அவரது கால்களை பிடித்துக் கொண்டு அவரோடு பேசுவாள். 'அம்மா, அப்பா' என்று வாய் நிறைய அழைத்து அன்பாக பேசும் யாழினியை மகளாகவே நினைத்தனர். ருத்ரனின் தம்பி இந்திரனும் படிப்பை முடித்தவுடன் வேலைக்குச் செல்ல தொடங்கியதால், அதிகமாக பேச முடியவில்லை. ஆனாலும் பயிற்சி காலம் என்பதால் ருத்ரனை விட சற்று முன்னதாகவே வந்து விடுவான் என்பதால், சிறிது நேரம் அவனது வேலையைப் பற்றி பேசுவாள். மொத்தத்தில் தன் குடும்பம் என்று அவர்களோடு இணைந்து கொண்டாள்.
மாமனார்,மாமியார், கொழுந்தன் என்று தன்னை இணைத்துக் கொண்டவள், கணவனுக்கும் தனக்கும் இடைவெளி சிறிது சிறிதாக அதிகரிப்பதை உணராமல் விட்டு விட்டாள். ஆனால் அவனுக்கு எடுத்துச் செய்வதில் எதிலும் குறை வைக்கவில்லை. அடிக்கடி கொஞ்சி பேசுவது படி படியாக குறைந்தது. வேலைக்குச் சென்று விட்டு சோர்ந்து வரும் அவனிடம் தன்னுடன் நேரம் செலவிடு என்று கேட்க அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. களைத்துப் போன ருத்ரனின் மனமும் உடலும் யாழினியை தேடியது. தன் குடும்பத்தோடு அவள் அன்பாக இருப்பதால், குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் நிலவுவதால் அவனும் அவளை நெருங்கவில்லை. இருவரது மனமும் ஒருவரையொருவர் தேடியும், ஒருவர் மனம் இன்னொருவர் அறியாமல் இருந்தனர்.
ESTÁS LEYENDO
தோயும் மது நீ எனக்கு(Edited)
Romanceவேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!