இருவருக்கும் இடையில் சிறிதளவே இடைவெளி இருக்க,யாழினியின் கண்களை பார்த்தான்;அதில் ஆர்ப்பரிக்கும் தனக்கான காதலை கண்டவன் அதற்கு மேல் தாங்காது அவளது செவ்விதழ்களைச் சிறைப் பிடித்தான் ருத்ரன்.அவனின் இதழ் முத்தத்தில் தடுமாறியவள் அவனது சட்டையை இறுக்கப் பிடித்துக்கொண்டாள்.சில நொடிகள் கரைய அவள் இதழ்களை விடுவித்தவன்,"நான் உன்னை ரொம்ப ரொம்ப காதலிக்கிறேன் கண்ணம்மா" என்று இதுவரை கூறாத அந்த வார்த்தைகளை ருத்ரன் கூற,கிறங்கி தான் போனாள் யாழினி.
"நானும் உங்களை ரொம்பவே காதலிக்கிறேன் ருத்ரா" என்று கண்களி்ல் தேக்கி வைத்த காதலுடன் கூறியவள்,வெட்கத்துடன் அவன் மார்பில் சாய்ந்தாள்.
"காதலடி நீ எனக்கு,காந்தமடி நானுனக்கு;வேதமடி நீ எனக்கு,வித்தையடி நானுனக்கு" என்று அவள் முகத்தை ஏந்தி கூறியவன் அவளை இறுக அணைத்துக்கொண்டான்.அப்படியே இருந்து விட்டால் என்ன என்று இருவருக்குமே தோன்றியது.சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள்,வெயில் சற்று அதிகமாகவே இருக்க அங்கிருந்து கிளம்பினார்கள்.வழியில் யாழினி அமைதியாகவே வர
“ஓய் அழகி,என்ன மெளன விரதமா?” என்று ருத்ரன் கேட்க
“இல்லை மாமா” என்று யாழினி வெட்கத்துடன் மெதுவாக கூறினாள்.
“அடியே அழகி!இங்கே பாரடி”
“என்ன மாமா” என்று பக்கவாட்டு கண்ணாடியில் அவனைப் பார்த்து கேட்டாள் யாழினி.
“ஏதாவது பேசுடி அழகி,நேற்றைக்கு ஏதோ நேரில் பார்க்கும்போது நிறைய பேச வேண்டும் என்று சொன்னாய் ” என்று ருத்ரன் கூற,அதன் பின் வாய் ஓயாமல் பேசிக்கொண்டு வந்தாள் யாழினி.அவள் பேசுவதை ரசித்துக் கொண்டே வண்டி ஒட்டியவனுக்கு துளி கூட களைப்பு தெரியவில்லை.
மதிய உணவு நேரம் என்பதால் உயர்தர சைவ உணவகத்திற்கு அவளை அழைத்துச்சென்றான்.யாழினிக்கு பிடித்தமானதாக வாங்கியவன்,அவள் சாப்பிட முற்பட்ட போது தடுத்தான்.என்ன என்பது போல் யாழினி அவனையே பார்க்க,தன் கையாலேயே யாழினிக்கு ஊட்டி விட்டான் ருத்ரன்.அவனது செய்கையில் தாய்மையை உணர்ந்தவள்,அவன் ஊட்டியதை ரசித்து ருசித்து சாப்பிட்டாள்.சிறு குழந்தை போல் யாழினி மேலே இறைத்து கொள்ள, அதை ரசித்தவாறு அவனும் துடைத்து விட்டான்.ருத்ரனின் அன்பில் திளைத்தவளுக்கு கண்களில் கண்ணீர் வர,அவனறியாமல் அதை துடைத்து கொண்டாள்.
YOU ARE READING
தோயும் மது நீ எனக்கு(Edited)
Romanceவேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!