ருத்ரனின் கை வளைவில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தவள், கைபேசியில் வைத்திருந்த அலாரம் தொடர்ந்து அடிக்க, அதை அமைதியாக்கி விட்டு மெதுவாக ருத்ரனைப் பார்த்தாள். தன்னவள் என்ற உரிமையில் யாழினியின் இடையை இறுக அணைத்தவாறு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் ருத்ரன்.
நேற்று இரவு காதல் விளையாட்டில் ருத்ரன் தன்னை தோற்கடித்தது நினைவுக்கு வர கன்னங்களில் சிவப்பேறியது யாழினிக்கு. விளையாடிய களைப்பிலும் வெற்றி பெற்ற களிப்பிலும் உறங்கிக் கொண்டிருந்தவனை ஆசை ஆசையாக ரசித்துக் கொண்டிருந்தாள் யாழினி. அவனது தலைமுடியை இதமாக தடவி, அவனது நெற்றியில் தன் காதல் முத்தத்தை பதித்தாள். உறவுகள் காத்திருப்பார்கள் என்பது நினைவுக்கு வர, அவனது உறக்கம் கலையாதவாறு கைகளை விலக்க முயற்சித்தாள். மேலும் அவனது பிடி இறுக்கமாக, மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
ருத்ரன் உறங்கிக் கொண்டிருந்தது போல் தான் இருந்தது. மீண்டும் அவனது கைகளை விலக்க முயற்சிக்க, அவனது அணைப்பு இன்னும் இறுகியது. அவனது விளையாட்டை புரிந்து கொண்டவள், மெதுவாக அவனது காதருகே சென்று, “என் ருத்ரனின் கள்ளத்தனம் எனக்கு தெரியாதா? சரியான மாயகள்வன்!” என்று கூறி காதை கடித்து விட்டாள்.
“ராட்சஷி” என்று கத்திக் கொண்டே தன் மீது அவளை இழுத்து சாய்த்து கொண்டான் ருத்ரன். “என்னை விடுங்கள், கீழே போக வேண்டும்; இன்னும் சில சடங்குகள் இருக்கிறது, எனக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று சினுங்கினாலும், அவனுடன் மேலும் ஒன்றிக் கொண்டாள் யாழினி. அவளது செய்கையை ரசித்துக் கொண்டே “ உன் வாய் மட்டும் தான் அப்படி கூறுகிறது” என்று அவளை சீண்டினான். அவன் முகத்தோடு முகம் இழைத்து “ என்ன செய்வது, மாயகள்வனாய் வந்து என் மனதை கொள்ளை அடித்து கொண்டீர்கள், அதனால் உங்கள் பேச்சை தான் கேட்கிறது” என்று மய்யலுடன் கூறினாள். அவளது பேச்சில் கிறங்கியவன், மேலும் இறுக்கி கொண்டு அவளது இதழ் கடலில் முத்துக்களை தேடினான். அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து தன் முத்தங்களை பதிக்க, அவனுள் தன்னை தொலைத்தாள் யாழினி. அவனது கைகள் அத்துமீற, “போக வேண்டும் மாமா” என்று அவள் கெஞ்ச, “முடியாது, என் பொண்டாட்டி நான் கொஞ்ச கூடாதா?” என்று மேலும் இடையில் அழுத்தம் கூட்டினான்.

VOCÊ ESTÁ LENDO
தோயும் மது நீ எனக்கு(Edited)
Romanceவேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!