Chapter 32

104 2 0
                                    

இதயம் வேகமாக துடிக்க ஜானவி நிமிர்ந்து பார்த்தபோது ஆதியின் முகத்தில் இருந்த காதல் அவளை திணற வைத்தது. அவனது  பார்வை  அவளை தாக்க, அதற்கு மேல் முடியாமல் கண்களை மூடிக்கொண்டாள்.

சிறிது நேரம் மவுனமாக கரைய, "என் கண்களை பார்த்து சொல் என்றுச் சொன்னேன்" என்று ஆதி உறுதியாக ஆனால் மென்மையாக கேட்டான். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவள் மனதுடன் போராடிக் கொண்டிருந்தாள். அவளின் மனப் போராட்டத்தை சிறிது நேரம் ரசித்தவன், "ஏன்டி இப்படிப் படுத்துகிறாய், உன் நேசத்தை மறைக்க ஏன் நினைக்கிறாய்" என்று அவளிடம் இன்னும் நெருங்கி நின்று கேட்டான்.🥰

அவனது நெருக்கம் அவளை தடுமாற வைக்க, ஜானவி அவளது மனதை கட்டுப் படுத்த பெரும் பாடுபட்டாள். ஆதி மெதுவாக தன்னை நெருங்குகிறான் என்பதை உணர்ந்தவள், தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு அவனிடமிருந்து விலகி நின்றாள். ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றி அவனைப் பார்த்து, "உங்களிடம் எந்த விளக்கமும் தர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, தயவுசெய்து வெளியே செல்லுங்கள்" என்று கோவமாக கூறி விட்டு திரும்பி நின்றாள்.😡

சற்று நேரம் அமைதியாக செல்ல, அவன் சென்று விட்டான் என்று நினைத்து அப்படியே தரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.😭

"சென்னை மழை இல்லாமல் காய்ந்து கிடக்கிறது, இன்னும் கொஞ்சம் நீ வேகமாக அழுதால், சேமித்து வைக்க வழி பார்க்கலாம்" என்று ஆதி நக்கலாக கூற, 😏தூக்கி வாரி போட திரும்பி பார்த்தாள் ஜானவி. "நீங்கள் இன்னும் வெளியே போகவில்லையா! உங்கள் யார் இவ்வளவு உரிமைக் கொடுத்தது " என்று கோபமாக கேட்டாள். 😡

"எந்த உரிமையைப் பற்றி முதலில் பேச வேண்டும் " என்று மறைமுகமாக ஆதி கேட்க, முகத்தை திருப்பிக் கொண்டாள் ஜானவி. "என்னை காதலிப்பதை ஏன் மறுக்கிறாய் ஜானவி?, என்னிடம் என்ன குறை கண்டாய் அப்படி?" என்று அவளை நெருங்கி கொண்டே கேட்டான்.

இதயம் மறுபடியும் பந்தய வேகத்தில் துடிக்க ஆரம்பிக்க, அதை அடக்க பெரும்பாடுபட்டாள். தீர்க்கமாக நிமிர்ந்தவள், "ஏன் என்று சொன்னால் என்னை விட்டு சென்று விடுவீர்களா?" என்று கேட்டாள். 😤

தோயும் மது நீ எனக்கு(Edited)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon