Chapter 26

1.5K 61 17
                                    

யார் இந்த புதியவன் என்று அவள்  யோசிக்க, காபி கொண்டு வந்த சாதனா, "அக்கா, நீயும் இங்கு தான் இருக்கிறாயா, கடையில் இருந்து எப்போது வந்தாய்?" என்று கேட்க, "அது இப்போது தான் வந்தேன், நீ சமையல் அறையில் இருந்தாய், அதான் உன்னை அழைக்கவில்லை" என்று வார்த்தைகள் தேடி சற்று தடுமாறி கூறினாள் அவள். என்றும் இல்லாது தயங்கி தயங்கி பேசும் அக்காவை ஆச்சரியமாக பார்த்தாள் சாதனா.

"சாதனா" என்று ஆதி அழைக்க அவசரமாக திரும்பியவள், "அடடா உங்களை மறந்து விட்டேனே😅 காப்பி குடியுங்கள் அண்ணா" என்று கூற, "உன்னை நம்பி குடிக்கலாமா சாதனா" என்று கிண்டலாக சிரித்து கொண்டே கேட்டான் ஆதி. "இந்த காப்பி பொடி அக்கா கைப்பட வருத்து அரைத்தது அண்ணா, சுவையாக இருக்கும்" என்று பெருமையாக கூற, "என்னவோ உன் அக்காவே கொட்டையை அறுவடை செய்தவள் போல் சொல்கிறாயே, வறுத்து அரைப்பது எல்லாம் பெரிய விஷயமா சாதனா" என்று (காப்பி கொட்டையுடன் சிக்கரியும் சரியான அளவில் கலந்து அரைப்பது எல்லாம் தெரியாமல்) பெரிய நகைச்சுவை கூறியதாக நினைத்து சிரித்தான் ஆதி.

"ஆனாலும் உங்களுக்கு வாய் அதிகம் தான் அண்ணா, அதை விடுங்கள், இவள் தான் என் அக்கா ஐானவி, சொந்தமாக துணி கடை வைத்து நடத்துகிறாள், இங்கே நம் வீட்டிற்கு பின் வழியில் தான் உள்ளது" என்று கூறியவள், ஐானவி புறம் திரும்பி, "அக்கா, இவர் தான் ஆதி, அலுவலகத்தில் என்னை எல்லா வகையிலும் உதவியாக இருக்கிறார், நீ வர நேரமாகி விட்டதால் எவ்வளவு சொல்லியும் கேளாது வண்டியில் அழைத்து வந்தார்" என்று ஒருவருக்கொருவரை அறிமுகப்படுத்தினாள் சாதனா.

ஆதி அவளைப் பார்த்து தலை அசைத்து புன்னகைக்க, ஐானவி அவனை கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் பார்த்து வைத்தாள். அதில் சற்று கடுப்பான ஆதி,"ஏன் சாதனா, துணி கடை என்று சொன்னாயே, பத்துக்கு பத்தாவது கடை இருக்குமா?" என்று கிண்டல் அடிக்க, "என்ன அண்ணா இப்படி கேட்கிறீர்கள், அக்காவின் உழைப்பில் வளர்ந்த கடை அது! ரொம்ப பெரிய இடம் இல்லை என்றாலும் தாராளமாக தான் இருக்கும் அண்ணா" என்று பெருமையாக கூற, 'தெரிந்து கொண்டாயா' என்பது போல் ஆதியை நக்கலாக பார்த்தாள் ஐானவி.

தோயும் மது நீ எனக்கு(Edited)Donde viven las historias. Descúbrelo ahora