Chapter 13

1.8K 84 38
                                    

யாழினி தந்தையிடம் எப்படி கூறுவது என்று யோசித்துக் கொண்டிருக்க, தந்தை தேவனிடம் சென்று யாழினியை விரும்புவதாக கூறி விட்டு அவரது பதிலுக்காக காத்திருந்தான் ருத்ரன்.என்ன தான் மகன் படித்து முடித்து சுயமாக வேலைத் தேடிக் கொண்டு அதில் முன்னேறினாலும் திருமணம் என்பது அவனது வாழ்க்கை சம்பந்தப்பட்டது அல்லவா,அதனால் "அவளிடம் பேச வேண்டும்" என்று கூறிவிட்டார்.

தந்தை தவறாக நினைத்து கொள்வாரோ என்று கலங்கினாலும்,சொல்லி தான் ஆக வேண்டும் என்று மனதை உறுதிப்படுத்தி கொண்டு நேராக தந்தை கஜேந்திரனிடம் சென்றாள் யாழினி.அன்றைய நாளிதழ்களை ஆர்வமாக படித்துக்கொண்டிருந்தார் கஜேந்திரன்.
"அப்பா,உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்"
"என்னம்மா யாழினி,சொல்லும்மா"
"எனக்கு மாப்பிள்ளை பார்க்கப்போவதாக சொன்னீர்கள்"
" ஆமாம் மா,நீயும் விருப்பப்பட்ட மாதிரியே பேராசிரியர் வேலைக்கு சேர்ந்துவிட்டாய்,இனிமேல் உன்னை ஒருத்தன் கையில் பிடித்துக்கொடுத்து விட்டால் எனக்கு ஒரு கடமை முடிந்து விடும்"
"உங்கள் விருப்பப்படி நடக்கட்டும்,ஆனால் என்னை ஒருவர் ரொம்ப விரும்புகிறார்,நல்ல பையன்,நல்ல குடும்பம்,நல்ல வேலை,எனக்கும் பிடித்திருக்கிறது,நீங்கள் பேசி பாருங்கள்,உங்களது விருப்பம் தான் முக்கியம், உங்களை மீறி எதுவும் நடக்காது அப்பா" என்று வார்த்தைகளை தேடி எடுத்து அவரது மனம் புண்படாமல் கூறினாள்.

மகள் கூறியதை கேட்டவர் அமைதியாக இருந்தார்.என்ன சொல்ல போகிறார்? என்று தவிப்பாக அவரையே பார்த்து கொண்டிருந்தாள் யாழினி.சிறிது நேரம் யோசித்தவர்,இது தான் என் முடிவு என்று மற்ற பிள்ளைகள் போல் கூறாமல் தந்தையின் விருப்பத்திற்காக காத்திருக்கும் தன் மகளை நினைத்து பெருமை பட்டார் கஜேந்திரன்."அவர்களை முறையாக வந்து கேட்க சொல்லும்மா" என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.
ஒரு நொடி ஒன்றும் புரியாமல் விழித்தவள்,மறுநொடி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.ருத்ரனை கைபேசியில் உடனே அழைத்து சொல்ல, அந்த பக்கம் தந்தை தேவன் கூறியதை ருத்ரன் சொல்லவும் சற்றே பதற்றம் தொற்றிக் கொண்டது யாழினிக்கு!

தோயும் மது நீ எனக்கு(Edited)Où les histoires vivent. Découvrez maintenant