Chapter 21

1.6K 69 15
                                    

மாதங்கள் வேகமாக செல்ல ருத்ரனுக்கும் பெங்களூரில் வேலை முடிந்து யாழினி உடன் சென்னை வந்து சேர்ந்தான். வாழ்க்கை இயல்பாக நகர்ந்தது. அன்று வழக்கம் போல யாழினி கல்லூரி முடிந்து இரயில் ஏறி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தாள். பின்புறத்தில் இருந்து முதுகில் யாரோ தொட, பட்டென்று திரும்பி பார்த்து முறைத்துப் பார்த்து விட்டு வேகமாக நடந்தாள் யாழினி. அவளது முடியைப் பிடித்து இழுக்க, மீண்டும் முறைத்து விட்டு "என்ன வேண்டும் உனக்கு இப்போது?, எதற்காக என்னை தொந்தரவு செய்கிறாய்?" என்று கோவமாக கேட்டாள். 😡

"உனக்கு எதற்கு இவ்வளவு கோபம் இப்போது? என் சூழ்நிலை என்ன என்று சொன்னால் உனக்குப் புரியும், உன்னோடு பேச வேண்டும் யாழினி"😕
"கோபம் வராமல் எப்படி இருக்கும்? என் திருமணத்திற்கு வந்தது, அதன் பிறகு பேசுவதையே நிறுத்தி விட்டாய்! என்ன பெரிய பிரச்சனை அப்படி வந்து விட்டது உனக்கு சமன்விதா?"😤
(யார் என்று புரியாமல் இருந்தால் ஆறாவது அத்தியாயத்தை படித்து பார்க்கவும்) 
என்று யாழினி பொரிந்து தள்ள,😤 அவளது வாயை மூடி " அம்மா தாயே! உன் ஒலிப்பெருக்கியைக் கொஞ்சம் நிறுத்து! ஊரே பார்க்கிறது, தயவுசெய்து என்னுடன் வா " என்று யாழினியின் பதிலை எதிர்பார்க்காமல்   வேகமாக அருகில் இருந்த பூங்காவிற்கு இழுத்துச் சென்றாள் சமன்விதா.

"இப்போது சொல் அப்படி என்ன பிரச்சனை உனக்கு?" என்று யாழினி கேட்க, எப்படி சொல்வது என்று யோசித்து கொண்டிருந்தாள் சமன்விதா. 😕
"யாழினி உனக்கு ராகவ்வை நியாபகம் இருக்கிறதா?"
"ராகவ் அண்ணா தானே? நன்றாக நியாபகம் இருக்கிறதே"
"அவன் என்னை காதலிக்கிறேன் என்று சொல்லியது நினைவு இருக்கிறதா யாழினி?"
"எதுவும் மறக்கவில்லை சதா, உன்னை அத்தனை ஆழமாக யாரும் நேசிப்பார்களா என்று அவ்வப்போது நினைப்பேன்! நீ தான் வேண்டாம் என்று சொல்லி விட்டாயே!"
"ஏன் என்று உனக்குத் தெரியாதா யாழினி, என் வீட்டில் எவ்வளவு கண்டிப்பு என்று உனக்கு தான் தெரியுமே, அதுவும் இல்லாமல் அவன் மேல் எந்த ஈடுபாடும் அப்போது இல்லையே!"

தோயும் மது நீ எனக்கு(Edited)Donde viven las historias. Descúbrelo ahora