Chapter 29

1.2K 56 8
                                    

ஆதியின் கேள்வி அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதை வெளிக் காட்டாமல், அவனை முறைத்துப் பார்த்தாள் ஜானவி.
"முறைத்துப் பார்த்தால் என்ன அர்த்தம்?" என்று ஆதி புருவத்தை உயர்த்தி கேட்க, பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் ஜானவி. "நீ பேசாமல் இருப்பதால் எதுவும் தெரியாமல் போய் விடும் என்று நினைக்கிறாயா ஜானவி?" என்று ஆதி கேட்க, மீண்டும் மௌனத்தையே பதிலாகக் கொடுத்தாள்.

சிறிது நேரம் அவளையே ஆழமாகப் பார்த்து விட்டு, "உன்னுடைய இந்த அமைதி ஒரு நாள் உடையும் ஜானவி! அன்று நீயே என்னைத் தேடி வருவாய்!" என்று அழுத்தமாக கூறி விட்டு அவளை நோக்கிச் சென்றான் ஆதி!
துடிக்கும் இதயத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஜானவி! அவளுக்கு மிக அருகில் வந்து அவளது கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டே அவளது இடது கையைப் பற்றி எதையோ எழுதி விட்டு வேகமாகச் சென்று விட்டான் ஆதி!

ருத்ரனின் அலட்சியம் மனதில் கோபத்தை அதிகரிக்க, அவன் மீதான லீனாவின் வன்மமும் அதிகரித்தது.
தடம் மாறிய அவளது வாழ்க்கை, அவள் அறியாமல் அவளது நிம்மதியை கலைத்தது! எதையோ தேடி மனம் அலைந்து தவிக்க, அதை உணர மறுத்தாள் லீனா!

வழக்கம் போல் மதிய உணவை முடித்து விட்டு யாழினி உடன் பேசிக் கொண்டிருந்தான் ருத்ரன். லீனா அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டு ருத்ரனையே பார்த்துக் கொண்டிருந்தாள். மதிய உணவை உண்ணும் போது அடிக்கடி ருத்ரனை வேண்டும் என்றே இடிக்க, நாசுக்காக பேசிக் கொண்டே எழுந்து சென்று விட்டான் ருத்ரன். அவன் தன்னை அலட்சியம் செய்வதாக நினைத்து,
"நீயே வந்து என்னிடம் பேசுவாய்! பேச வைப்பேன் " என்று மனதில் கறுவிக் கொண்டாள் லீனா!

அலுவலகத்திற்கு வெளியே சென்று நின்று கொண்டு யாழினி உடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

"அடிக்கடி வாந்தி வருவதாக சொன்னாயே கண்ணம்மா, மருத்துவரிடம் சென்று வரலாமா கண்ணம்மா!?" 😟

"அதெல்லாம் கர்ப்பக் காலத்தில் வழக்கமான ஒன்று தான் மாமா, நீ கவலைப்படாதே மாமா" ❤

"நிறைய தண்ணீர் குடி,  பசித்தால் உடனே சாப்பிடு, புத்தகம் படிக்கும் போது முதுகின் பின் தலையணை வைத்து அதன் மீது சாய்ந்து கொள் கண்ணம்மா" ❤

"நான் என்னையும் நம்ம குழந்தையையும் நன்றாக பார்த்து கொள்வேன் மாமா, அம்மாவும் அப்பாவும் எல்லாமே பார்த்து பார்த்து செய்கிறார்கள், நீ நிம்மதியாக வேலையைப் பார் மாமா" 😍❤

"இந்த சமயத்தில் கணவன் கூட இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் பெண்கள் என்று கேள்விப்பட்டேன், அவ்வப்போது வேலை என்று உன்னுடன் அதிக நேரம் இருக்க முடியவில்லை கண்ணம்மா, மன்னித்து விடு கண்ணம்மா" 😌❤

"வேலை இல்லாத சமயத்தில் என் கூட தானே மாமா இருக்கிறாய், தாயாக கணவனாக தந்தையாக நீ இருந்து என்னையும் நம் குழந்தையையும் பார்த்துக் கொள்ளும் போது எனக்கு கவலையே இல்லை மாமா" 😌😍❤

வாழ்க்கை முன்பைவிட அழகாக மாறியது போல் இருந்தது ஆதி மற்றும் யாழினிக்கு! தாய்மை கொடுக்கும் இன்பமான இன்னல்களின் போது தாயாக மாறி உடன் இருந்து அவளைத் தாங்கினான் ருத்ரன்! தன்னவனின் அருகாமையை மனம் வேண்டினாலும் உழைத்து களைத்து வருபவனை இருகரம் நீட்டி அணைத்து தன் நெஞ்சினில் சுமந்தாள் யாழினி! அவன் அறியாத அவள் இல்லை! அவள் அறியாத அவன் இல்லை!

அவன் சென்று பல நிமிடங்கள் கழிந்த பின்னும், அவன் தந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தாள் ஜானவி! எதை மறந்ததாக நினைத்தாளோ, தன் மனம் அதை மறக்கவில்லை என்பதை உணர்த்தி சென்ற ஆதியின் மேல் கோபமும் வெறுப்பும் வந்தது. செல்லும் போது தன் கையில் அவன் ஏதோ எழுதியது நினைவு வர, அவசரமாக இடதுகையை பார்த்தாள். அவன் தனது தொலைபேசி எண்ணை எழுதி  வைத்திருக்க, கோபமாக அதை அழிக்கச் சென்றாள் ஜானவி. ஆனால் மனமோ தடுக்க, எதற்கும் இருக்கட்டும் என்று அந்த எண்ணை தனது கைபேசியில் பதிவு செய்தாள். "அவனைத் தான் பிடிக்கவில்லையே உனக்கு! பிறகு எதற்கு அவனது கைபேசி எண்!?" என்று ஏளனமாக கேட்ட மனதை அடக்க வழித் தெரியாமல் தவித்தாள் ஜானவி!

அன்று மாலை யாழினிக்கு தேவையான பழங்கள் மற்றும் இதர பொருட்களை வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்தான் ருதரன். தேவனும் இளமதியும் அருகில் இருந்த பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்குச் சென்றிருந்தனர். தனக்கு பிடித்தமான புத்தகம் ஒன்றை யாழினி படித்துக் கொண்டிருக்க, வெளியே அழைப்பு மணி சத்தம் கேட்க, கதவைத் திறந்தாள் யாழினி. வெளியே வயதான தம்பதியர் இருவர் நின்று கொண்டிருந்தனர்!

தோயும் மது நீ எனக்கு(Edited)Donde viven las historias. Descúbrelo ahora