இது என்ன உணர்வு என்று புரிந்தும் புரியாமல் மனம் தவிக்க, அதை அமைதி படுத்த அந்த ஆனை முகத்தோன் விநாயகரை காணச் சென்றாள் சமன்விதா 😌 கோயில் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நேராக விநாயகர்
சந்நிதிக்குள் நுழைந்தாள்."பிள்ளையாரப்பா, என்ன இது, ஏன் என் மனது ராகவ்வை தேடுகிறது? முன்னாடி இப்படியெல்லாம் இருந்தது இல்லையே! அவன் என்னிடம் காதலை சொல்லிய போது வராத உணர்வு இப்போது மட்டும் எப்படி? 😞 இது தான் காதலா? அவனுக்கு நான் தகுதியானவளா? இந்த காதல் அவனுக்கு மகிழ்ச்சியை தருமா?😔 இந்த வாழ்க்கை எனக்கு கிடைக்குமா? இப்போது என் உணர்வுகளை சொன்னால் அவன் தவறாக எடுத்து கொள்வனா? இந்த மனக் குழப்பத்தை நீ தான் தீர்த்து வைக்க வேண்டும் விநாயகா😭😢" என்று தன் மனம் போன போக்கில் அந்த விநாயகரிடம் புலம்பி விட்டு கோயிலை விட்டு வெளியே வந்தாள்.
காலணியை தேடி அணிந்து விட்டு நிமிர்ந்து பார்க்க, ராகவ் வண்டியில் பின்னால் ஒரு பெண்ணை அமர வைத்து சென்று கொண்டிருந்தான். அவனை பல மாதங்களுக்கு பிறகு பார்த்த உற்சாகம் ஒரு புறம் இருந்தாலும், பின்னால் இருக்கும் பெண் யார் என்று மனம் நெருடியது சமன்விதாவிற்கு.
"ஒரு வேளை அந்த பெண் அவனுடைய காதலியா? ஆனால் என்னிடம் காதலிப்பதாக சொன்னானே?😞 " என்று மனம் யோசிக்க,
"ஆமாம் நீ விருப்பம் இல்லை என்று சொன்ன பிறகும் உனக்காக காத்திருக்க வேண்டுமா" என்று மூளை ஏளனம் செய்ய, என்ன செய்வது என்று தெரியாமல் மேலும் குழம்பி போனாள் சமன்விதா. 😖மனம் போன போக்கில் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவள், தன்னை அறியாமல் ராகவ்வின் வீட்டிற்கு அருகில் வந்திருந்தாள். அவள் மனம் முன்பு பழகிய நாட்களை நினைவு படுத்த, அதில் மூழ்கி போனாள்.
வீட்டில் இருந்து ஆண் பெண் இருவரின் சிரிப்பு சத்தம் கேட்டு நினைவுகளில் இருந்து மீண்டாள்.ராகவ்வின் குரல் என்பது தெளிவாக தெரிய, மனம் அவனிடம் செல்ல துடித்தது. உடன் சேர்ந்து சிரித்த பெண்ணின் குரல் மனதை குடைய தன்னை அறியாமல் அவன் வீட்டை நோக்கி நடந்தாள். இப்போது அவர்களது பேச்சு தெளிவாக கேட்டது.
DU LIEST GERADE
தோயும் மது நீ எனக்கு(Edited)
Romantikவேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!